மத்திய அரசின் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் 2024… யார் விண்ணப்பிக்கலாம்… என்ன ஆவணங்கள் தேவை… பல முக்கிய தகவல்கள் இதோ…

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைப் பெண்கள், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஊனமுற்ற பெண்கள் ஆகியோர் சுயதொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் மத்திய அரசின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டம் இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டம் ஆகும். இதன் மூலம் நாட்டில் சுய வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இலவச சிலாய் இயந்திர திட்டத்தின் மூலம் தகுதியானவர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வாங்குவதற்கான 15000 ரூபாயை மத்திய அரசு நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்துகிறது. 18 வயதிலிருந்து 40 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். அவர்களின் மாத வருமானம் 12000 க்கும் கீழ் இருக்க வேண்டும்.

தையல் தொழிலைக் கற்றுத் தேர்ந்து, தொழில் ஆரம்பிக்க முடியாத பெண்களுக்கு இந்த இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படும். இதனால் பெண்கள் பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திராமல் தன்னிச்சையாக தங்கள் வாழ்வாதாரத்தை பார்த்துக் கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் மலைவாழ் பழங்குடியின பெண்களுக்கு இலவச தையல் பயிற்சியும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இதன் மூலம் தையல் கற்று தேர்ந்த பெண்களை ஒன்றாக்கி, அரசன் இலவச பள்ளிச் சீருடையை தைத்துக் கொடுக்கும் வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது.

இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் சில முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் இந்திய குடிமகளாக இருக்க வேண்டும். மேலும் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வருமான சான்றிதழ், அட்ரஸ் மற்றும் வயது ஆதாரம், சாதி சான்றிதழ், தையல் படித்து முடித்ததற்கான சான்றிதழ், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், ஊனமுற்றோர் ஆகியோர் என்றால் அதற்கான சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, மின்னஞ்சல் ஐடி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு india .gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews