கிள்ளிப் போட்ட ஏ.வி.எம் சரவணணுக்கு வெற்றியால் அள்ளிக் கொடுத்த விசு.. AVM நிறைவேற்றிய ஆசை!

தமிழ்த் திரைப்படங்களில் குடும்பப் பாங்கான கதைகளைச் சொல்லி உறவுகளின் முக்கியத்துவத்தையும், கூட்டுக்குடும்ப மகத்துவத்தையும் எடுத்துரைத்த இயக்குநர்தான் விசு. கே.பாலச்சந்தரிடம் கதை, வசனகார்த்தாவாக பல படங்களில் பணியாற்றி பின் 1982ல்  கண்மணி பூங்கா என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். முதல் படம் சரியாகப் பேசப்படாமல் இருக்க தனது அடுத்த படமான மணல் கயிறு படம் மூலம் சினிமா உலகை கவனிக்க வைத்தார்.

தொடர்ந்து பல படங்களை இயக்கியும், அதில் நடித்தும் வந்தவர் சம்சாரம் அது மின்சாரம் படத்தின் மூலம் உச்சத்தைத் தொட்டார். விசுவின் படங்களில் பிரதானமே அவரது வசனங்கள் தான். சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வசனங்களில் மாஸ் காட்டியிருப்பார் விசு. சிறந்த குடும்பத் திரைப்படத்திற்கான தேசிய விருதினை இப்படம் பெற்றது.

இப்படத்தினை தயாரித்தவர்கள் ஏ.வி.எம் நிறுவனத்தார். விசு சம்சாரம் அது மின்சாரம் படத்திற்காக ஏ.வி.எம் நிறுவனத்தை அணுகிய போது மிக மிக குறைந்த பட்ஜெட்டையே ஒதுக்கியிருக்கிறார்கள். மேலும் படப்பிடிப்பிற்காக ஒரே ஒரு கார்தான் தரப்பட்டது. வெறும் 15 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் விசுவுடன் ரகுவரன், லட்சுமி, கமலா காமேஷ், மனோரமா, சந்திரசேகர், காஜா ஷெரீப், டெல்லிகணேஷ் உள்ளிட்ட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.

ஒரு கூட்டுக் குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழும் குழப்பங்களால் குடும்பம் எப்படிபிரிகிறது பின்னர் என்னவாகிறது என்பதற்கான கதையை அழுத்தம்திருத்தமாகச் சொல்லி ரசிகர்களைப் புல்லரிக்க வைத்தார் விசு.  இப்படத்தின் ஒவ்வொரு கேரக்டரும், அந்தப் பெயர்களும் இன்றளவும் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களாக விளங்கியது. இந்தக் காமெடிக்காக மனோரமா முதலில் சேர்க்கப்பட்டாலும் பின்னர் அவரே கதையின் திருப்பமாக மாறி வசனங்கள் பேசுவார்.

சாமியாட வைக்கும் தாயே கருமாரி ஆல்பம்.. LR ஈஸ்வரியின் கிளாசிக்கல் ஹிட் அம்மன் பாடல்கள்

விசு அப்போது வளர்ந்து வந்த இயக்குநராக இருந்ததால்ஏ.வி.எம். இந்தப் படத்தினை போகிற போக்கில் எடுத்தது.  ஆனால் அவர்கள் நினைத்தது வேறு படம்  வெளியாகி அவர்களின் முந்தைய இரு படங்களின் வசூல் சாதனையை மிஞ்சியது. விசுவின் மேல் கொண்ட அவநம்பிக்கையை உடைத்த ஏ.வி.எம்.சரவணன் அவரை பாராட்டினார். மேலும் தேசிய விருதினையும் படம் பெறவே மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றார்.

பிறகு விசுவிடம் இந்தப் பட வெற்றிக்காக உனக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட போது, தேசிய விருது வாங்கும் நிகழ்வினை எனது குடும்பத்தார் காணும்படி விமானத்தில் முதல்வகுப்பு பயணத்துடன் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்க, உடனே ஏ.வி.எம் சரவணன் விசு கேட்டது போலவே அவர்களை விமானத்தில் முதல் வகுப்பில் அழைத்துச் சென்றிருக்கிறார். மேலும் தான் இரண்டாம் வகுப்பில் பயணிக்கவே அதற்குரிய காரணத்தை விசு கேட்டபோது நான் இந்த இடத்தில் இருந்து  உங்களை மகிழ்ச்சிப்படுத்தி பார்ப்பதே சந்தோஷம் என்றும் கூறி விசுவினை நெகிழ வைத்துள்ளார் ஏ.வி.எம். சரவணன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...