வெளியானது Asus zenfone 11 ultra… மிரட்டலான AI ஒருங்கிணைந்த ஃபிளாஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது ஆசஸ் நிறுவனம்…

ஆசஸ் நிறுவனம் தைவனைச் சார்ந்த கணினி சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் தலைமையகம் தைவானில் உள்ளது. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், நெட்புக்கள், மொபைல் போன்கள், நெட்வொர்க்கிங் உபகரணங்கள், வைஃபை ரூட்டர்கள், மதர்போர்டுகள், ப்ரோஜெக்டர்கள், சர்வர்கள், கிராபிக்ஸ் கார்டுகள் ஆகியவை ஆசஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆகும்.

தற்போது ஆசஸ் நிறுவனம் தனது zenfone 11 ultra ஸ்மார்ட்போனை மார்ச் 14 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு உலகளவில் அறிமுகம் செய்தது. இந்தப் போனை பற்றிய அனைத்து விவரங்களை அந்நிறுவனம் வெளியிட்டது. தற்போது உள்ள ஸ்மார்ட்போன்களின் அடுத்தகட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட சக்திவாய்ந்த சாதனமாக இந்த zenfone 11 ultra ஸ்மார்ட்போன் இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஆசஸ் நிறுவனம் இந்தமுறை காம்பெக்ட் போன்களை அறிமுகப்படுத்தாமல் பெரிய போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது AI ஒருங்கிணைந்த ஃபிளாஷிப் ஸ்மார்ட்போன் ஆகும். AI தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது என்பதால் இந்த போனிற்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

இந்த Asus zenfone 11 ultra ஸ்மார்ட்போன் 6.78″ இன்ச் கொண்ட LTPO AMOLED டிஸ்பிளேவைக் கொண்டது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென 3 சிப்செட், 16 GB கொண்ட LPDDR5x ரேம், 512 GB ஸ்டோரேஜ், UFS 4.0 உள்ளது. இது OIS ஆதரவுடன் 50 MP + 13 MP + 32 MP ட்ரிப்பிள் ரியர் கேமரா மற்றும் முன்பக்கத்தில் 32 MP செல்பி கேமராவை கொண்டிருக்கும். மேலும் இதன் பேட்டரி 5500mAh, 65W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லஸ் சார்ஜிங் அம்சத்தைக் கொண்டுள்ளது ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன் கீக்பென்ச் பட்டியலில் 6,949 மல்டி ஸ்கோர்களைப் பெற்றுள்ளது மற்றும் 2,226 சிங்கள் ஸ்கோரைப் பெற்று samsung galaxy S24 ultra மற்றும் OnePlus 12 ஆகிய ஸ்மார்ட்போன்களை பின்தள்ளியுள்ளது.
இது AI2401 எண்னுடன் EEC சான்றிதழ் தளத்தைப் பெற்றுள்ளது. ரெண்டர் லீக், எடேர்னல் பிளாக், ஸ்கைலைன் ப்ளூ, மிஸ்ட்டி க்ரே,வெர்டுர் கிரீன் ஆகிய இந்த ஐந்து விருப்பமான வண்ணங்களில் தேர்வு செய்துக் கொள்ளலாம். மொத்தத்தில் Asus Zenfone 11 ultra ஸ்மார்ட்போன்களின் புதிய சகாப்தம் ஆக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews