வேறு நடிகை வேண்டாம்!.. ஆண்ட்ரியா தான் வேண்டும்.. அடம்பிடித்த இயக்குநர்!..

பாடகி மற்றும் நடிகையான ஆண்ட்ரியா திரையுலகில் பிரபலமாக இருந்து வரும் நிலையில் தற்போது ‘கா’ என்ற படத்தில் நடித்துள்ளார், அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆண்ட்ரியா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்ட்ரியாவின் ‘கா’ படம்:

பின்னணி பாடகியாக சினிமாவில் அறிமுகமான ஆண்ட்ரியா நடிப்பிலும் கவனம் செலுத்தினார். இவர் அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா, யாரடி நீ மோகினி படத்தில் ஓஹ் பேபி, ஆதவன் படத்தில் ஏனோ ஏனோ என பல ஹிட் பாடல்களை பிரபலமான நடிகர்கள் நடித்துள்ள படங்களில் பாடியுள்ளார். மேலும் ஹிரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுப்பவராகவும் வேட்டையாடு விளையாடு, ஆடுகளம், நண்பன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். ஆண்ட்ரியாவின் மென்மையான குரலுக்கென தனி ரசிகர்களே உள்ளனர்.

பின்னர் அவர் 2005ல் வெளியான கண்ட நாள் முதல் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாரின் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன், அஜித்துடன் மங்காத்தா, கமல்ஹாசனுடன் விஸ்வரூபம்1 மற்றும் 2, அரண்மனை, துப்பறிவாளன், வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்து கோலிவுட்டில் தனக்கேன தனி இடத்தை உருவாக்கி கொண்டார்.

இயக்குநரை அலற விட்ட ஆண்ட்ரியா:

சமீபத்தில் புதுச்சேரியில் ஆண்ட்ரியா நடத்திய கான்செர்ட் அமோகமான வரவேற்பை பெற்றது. மேலும் பின்னணி பாடல்களை பாடுவது மற்றும் கான்செர்ட் என பிஸியாக உள்ள ஆண்ட்ரியா படத்திலும் விடாமல் நடித்து வருகிறார். தற்போது ஆண்ட்ரியா அறிமுக இயக்குநரான நாஞ்சில் இயக்கத்தில் ’கா’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும் ’கா’ படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய ஆண்ட்ரியா, தனது உயிரை கொடுத்து இயக்கிய நாஞ்சிலுக்கு பாராட்டுகளை தெரிவித்து, இந்த படம் ஒரு குழந்தை போன்றது, அப்பா போன்ற தயாரிப்பாளரும், அம்மா போன்ற இயக்குநரும் ஓத்துழைக்காமல் இருந்தால் இந்த குழந்தை போன்ற படம் வளர்ந்திருக்க முடியாது.

மேலும் சில இயக்குநர்கள் சில நடிகைகளை தன் படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்த பின்னர் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை என்றால் வேறு நடிகையை தேர்வு செய்வார்கள். ஆனால் நாஞ்சில் இப்படத்திற்கு ஆண்ட்ரியா தான் நடிக்க வேண்டும் என அடம்பிடித்தார் என்று டபுள் மீனிங் தொனியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ’கா’ படத்தில் ஆண்ட்ரியா வன உயிர் புகைப்பட கலைஞராக நடித்திருப்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் த்துக்கொண்டிருக்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...