வாய்ப்பு தந்த அப்பாவை வார்த்தைக்கு வார்த்தை அசிங்கப்படுத்தும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. இப்படி சொல்லிட்டாரே?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்து வெளியான லால் சலாம் திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பினை பெறாததற்கு இது தான் காரணம் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகான்ந்த் தனுஷ் நடிப்பில் வெளியான 3, மற்றும் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான வை ராஜா வை ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருந்தார். அந்த இரண்டு படங்களுமே பெரிய அளவில் வரவேற்பினை பெறவில்லை. இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து தற்போது லால் சலாம் திரைப்படத்தை இயக்கியிருந்தார், இப்படம் ஐஸ்வர்யாவிற்கு ஒரு கம்பேக்காக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் மீண்டும் தன்னால் ஒரு வெற்றிப் படத்தை கொடுக்க முடியாது என நிரூபித்து விட்டார்.

மொய்தீன் பாயால் முடிந்த லால் சலாம்:

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் ரோலில் நடித்திருந்தார். இப்படத்திற்கு எ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, கே.எஸ்.ரவிகுமார், தன்யா பாலக்ரிஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் ரஜினிகாந்த் 40 நிமிடங்களே இப்படத்தில் நடித்திருந்தாலும் ஒரு நிமிடத்திற்கு 1கோடி என்பது போல் 40 நிமிட கதாப்பாத்திரத்திற்கு 40 கோடி சம்பளம் என்றெல்லாம் கூறப்பட்டது.

லால் சாலம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடித்திருந்தாலும் இப்படம் ஒரு சூப்பர் ஸ்டார் படமாகவே ப்ரோமோஷன் செய்யப்பட்டது. மேலும் இசை வெளியிட்டு விழாவில் ஐஸ்வர்யா என் அப்பா சங்கி இல்லை அதை இந்த படம் பார்த்தால் அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று கூறியிருந்தார் ஆனால் அதை பங்கமாக நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். அதை தொடர்ந்து ரஜினி பேசுகையில் இப்படம் ஒரு உண்மை சம்பவம் ,கண்டிப்பாக இந்த கதை தேசிய விருது வாங்கும் என்றெல்லம் பில்டப் பண்ணார். ஆனால், படம் அந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமாக இல்லை என பலரும் விமர்சித்து படத்தை காலி செய்து விட்டனர்.

அப்பா நுழைந்து கெடுத்து விட்டார்:

மேலும், ரஜினிகாந்த் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு சென்றது கூட லால் சலாம் படத்தின் தோல்விக்கு காரணம் என்றெல்லாம் சிலர் கூறினர். இந்நிலையில், தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த அளித்த பேட்டியில் என்னுடைய கதையில் இடைவேளைக்கு பிறகுதான் மொய்தீன் பாய் கதாபாத்திரம் வருவதாக இருந்தது. ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முதலிலேயே காட்ட வேண்டும் என்ற கட்டாயம் கடைசி நேரத்தில் கழுத்தை நெறிக்க என்ன செய்வதென்றே தெரியாமல் கடைசி இரண்டு நாட்களில் மொய்தீன் பாய் காட்சிகளை ஒப்பனிங்கிலேயே கொண்டுவந்தேன். அதுதான் இந்த படத்தில் நான் செய்த பெரிய தவறு என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...