தனுஷ் உடன் போட்டிக்கு பயமா?.. நான் ரஜினிகாந்த் பொண்ணு.. அதிரடி காட்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல ஆண்டுகளுக்கு பிறகு இயக்குகின்ற படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ரந்த் நடித்துள்ளனர்.

ஜெயிலர் திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்த சூப்பர் ஸ்டார், அடுத்து தலைவர் 170ல் நடித்து வருகிறார். இதனிடையே தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கேப்டன் மில்லர் vs லால் சலாம்

லால் சலாம் படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாக உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக லால் சலாம் படம் பொங்கல் அன்று வெளியாகாது என்ற தகவல் பரவியது. இப்பொது பொங்களன்று மூன்று படங்களுடன் சேர்ந்து ரீலிஸாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சிவராஜ்குமார் மற்றும் இளங்கோ குமரவேல் படத்தில் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் தனுஷும் 18 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “18 வருடங்கள் நாங்கள் நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் என ஒன்றாக இருந்தோம். ஐஸ்வர்யாவும் நானும் பிரிந்து தனித்தனியாக வாழ முடிவு எடுத்துள்ளோம். எங்களைப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் முடிவை மதித்து, இதைச் சமாளிப்பதற்குத் தேவையான தனியுரிமையை எங்களுக்குத் தாருங்கள். ஓம் நமசிவாயா! அன்பைப் பரப்புங்கள்” என்று எழுதி இருந்தனர்.

பொங்கல் போட்டி

கேப்டன் மில்லர் முன்பு, டிசம்பர் 15 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது . பின்பு கேப்டன் மில்லர் படத்தை பொங்கல் அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இப்பொழுது பொங்கல் அன்று லால் சலாம் படம் வெளியாக உள்ளதால், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாக்ஸ் ஆபிஸ் போட்டியை எதிர்கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், லால் சலாம் டீசர் தீபாவளி ஸ்பெஷலாக நாளை வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ், ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே, பொங்கல் 2024ல் அயலான், அரண்மனை 4 போன்ற படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் லால் சலாமும், கேப்டன் மில்லர் சேர்ந்து போட்டியில் களமிறங்க உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...