தனுஷ் இல்லனா அனிருத் இல்ல.. 3 படத்துக்கு முன்னாடி நடந்த ட்விஸ்ட்.. மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஒரு காலத்தில் இளையராஜா சிறந்த இசையமைப்பாளராக தமிழ் சினிமாவை கட்டி ஆண்டு கொண்டிருந்த நிலையில் தான் திடீரென ஏ. ஆர். ரஹ்மான் என்ற ஒரு இசைப்புயல் களமிறங்கி அத்தனை இசைப் பிரியர்களையும் தன் பக்கம் ஈர்த்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ்,யுவன் ஷங்கர் ராஜா என பல இசையமைப்பாளர்கள் வந்தாலும் சமீப காலமாக இளைஞர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை கவரும் வகையில் இசையமைத்து வருபவர் தான் அனிருத்.

20 வயதாவதற்கு முன்பாகவே இசையமைக்க ஆரம்பித்த அனிருத், இன்று ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படத்திலும் பணிபுரிந்து பாலிவுட்டில் ஷாருக்கான் திரைப்படம் வரைக்கும் சென்று விட்டார். இன்றைய ஒட்டுமொத்த இந்தியாவே கவனிக்கும் சிறந்த இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் தமிழ் தாண்டி பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளிலும் இசையமைத்து வருகிறார்.

இப்படி ஒரு பெரிய இடத்தில் அனிருத் இருந்தாலும், அவரது முதல் பாடலே சர்வதேச ஹிட்டடித்திருந்தது என்பது தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். 3 திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலை வெறி’ என்ற பாடல் சர்வதேச அளவில் அனிருத்தை ட்ரெண்டாக்கி இருந்தது.

தமிழ் சினிமாவில் புதிதாக இங்கிலீஷ் வரிகளை அனைவருக்கும் புரியும்படி தனுஷ் பாட, அதற்கு அனிருத் இசையமைத்திருந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்கள் பரவலாக இல்லாத காலத்திலேயே சர்வதேச அளவில் பெரிய பேசுபொருளாகவும் மாறி இருந்தது. தனது முதல் பாட்டிலேயே முத்திரை பதித்த அனிருத் அதன் பின்னர் தொட்டதெல்லாம் ஹிட் ரகம்தான் என கடந்த 12 ஆண்டுகளாகவும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் அனிருத் சிறந்த இசையமைப்பாளராக ஆனதற்கு பின்னாடி தனுஷ் இருந்த விஷயம் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. 3, விஐபி, தங்க மகன், விஐபி 2, திருச்சிற்றம்பலம் என தனுஷ் அனிருத் காம்போவில் உருவான அத்தனை திரைப்படங்களின் பாடல்களும் அருமையாக இருக்கும்.

3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அனிருத் இசை அமைப்பாளராக வந்தது பற்றி பேசிய சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசுகையில், “தனுஷ் அனிருத்திடமிருந்த திறமையை அறிந்து அவரை 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக செய்தார். அனிருத்தின் பெற்றோர்கள் அவரை வெளிநாட்டிற்கு படிப்பிற்காக அனுப்ப முடிவு செய்த சூழலில் அனைவரையுமே சமரசம் செய்து அவர் இசையமைப்பாளராக ஆக வேண்டும் என முடிவு செய்ததே தனுஷ் தான்.

அது மட்டுமில்லாமல் 3 திரைப்படத்தில் அனிருத் இசையமைக்க வேண்டும் என என்னிடமும் தனுஷ் தான் கூறினார். அனிருத் இந்த இடத்திற்கு உயர்ந்திருப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் அவரது கடின உழைப்பு மட்டும்தான்” என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...