சொகுசு கார் வாங்கிய ஜெயம் ரவி ஜோடி!.. அடேங்கப்பா இவ்வளவு விலையா என வாய் பிளக்கும் பிரபலங்கள்!..

ஐஸ்வர்யா லட்சுமி மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். தற்போது அவர் விலை மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ள புகைப்படங்கள் சமூக வளைத்தில் வைரலாகி வருகிறது. கேரளா மாநிலத்தை சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி ஒரு மருத்துவர் ஆனால் அவருக்கு மாடலிங் மேல் உள்ள ஆர்வத்தினால் முதன் முதலில் பத்திரிக்கைகளின் அட்டை பட மாடலானார். அதை தொடர்ந்து அக்ஷயா ஜுவல்லரிஸ் போன்ற சில விளம்பரங்களில் மாடலான இவர் பிரபலமாகி படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

சொகுசு கார் வாங்கிய ஐஸ்வர்யா லட்சுமி:

மலையாளத்தில் நிவின் பாலி நடித்த நண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா என்ற படத்தின் மூலம் ஐஸ்வர்யா லட்சுமி அறிமுகமானார். தமிழில் கார்திக் சுப்புராஜ் இயக்கி தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதை தொடர்ந்து மாயநதி, குமாரி, அம்மு, கேப்டன், உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் அவர் விஷ்னு விஷாலுடன் இணைந்து நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்களையும் கவர்ந்தார்.

இதை தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திலும் படகோட்டி பெண்ணாக புங்குழலி கதாபாத்திரத்தில் அனைவரையும் ஈர்த்தார். அப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம்ரவி, கார்திக், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்களுடன் நடித்திருந்தார். மேலும் கல்கி செதுக்கிய புங்குழலியின் கதாப்பாத்திரத்திற்கு ஐஸ்வர்யா லட்சுமி தன் நடிப்பால் உயிர் கொடுத்ததாக கூறப்பட்டது.

ஏகப்பட்ட படங்கள் கைவசம்:

கட்டா குஸ்தி படத்திலும் ஐஸ்வர்யா லட்சுமி அக்ஷன் சீனில் களமிறங்கி நடித்திருந்தார். ஒரு தைரியமான பெண்ணாக தனது அசாதரனமான நடிப்பில் பாராட்டுக்களை அள்ளினார். திருமணம் நடந்தவுடன் பெண் பல கட்டுப்பாட்டுடன் தான் இருக்க வேண்டும் என அவசியம் இல்லை என்பதை காதல் கலந்த ஆக்‌ஷன் படமாக கொடுத்தனர். மேலும் அம்மு படத்தில் இப்படத்தின் எதிர்மாறாக கணவனிடம் அடிவாங்கி கொண்டு அழுதுக்கொண்டே இருக்கும் அப்பாவி பெண்ணாக நடித்திருப்பார்.

இப்படி பல விதமாக தன் நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா லட்சுமி Range Rover Evoque 2024 என்ற லேட்டஸ்ட் மாடல் சொகுசு காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை ஒரு கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் கேரளாவில் இந்த புது மாடல் காரை முதலில் வாங்கியது இவர் தானாம். ஐஸ்வர்யா லட்சுமி புது காருடன் எடுத்த புகைப்படங்கள் பல மலையாள பிரபலங்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.