எங்ககிட்ட சரசம் பண்றதுக்குன்னே.. ஆப்கானிஸ்தானின் வினோத சாதனை.. அதுக்கு முக்கிய காரணமா இருந்த இந்திய பவுலர்கள்..

அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா என லீக் சுற்றில் அடுத்தடுத்த அணிகளை வீழ்த்தி கம்பீரமாக சூப்பர் 8 சுற்றிற்கு முன்னேற்றம் கண்டிருந்தது இந்திய கிரிக்கெட் அணி. கடந்த ஆண்டு இரண்டு முக்கியமான ஐசிசி தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒரு நாள் உலக கோப்பை என இரண்டையும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இறுதி போட்டியில் தவறவிட்டிருந்த இந்திய அணி நிச்சயம் இந்தமுறை டி20 உலக கோப்பையை கைப்பற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் தான் இருந்து வருகின்றனர். அந்த வகையில் இந்த சீசனில் மூன்று லீக் போட்டிகளில் வெற்றி பெற்று நேரடியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது இந்திய அணி.

பேட்டிங் பிரச்சனையாக பார்க்கப்பட்டாலும் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் உதவியால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் சூப்பர் 8 போட்டியில் சிறப்பாக ஆடி இருந்தது இந்திய அணி. அவர்கள் 181 ரன்கள் குவிக்க சற்று கடினமான இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணியும் பேட்டிங்கை தொடங்கியிருந்தது.

கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டும் சர்வதேச அளவில் அதிகம் கவனம் ஈர்க்கப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட பல பெரிய அணிகளையும் சில முக்கியமான ஐசிசி போட்டிகளில் வீழ்த்தி இருந்தது.

இதனால் இந்திய அணியின் பந்துவீச்சை திறம்பட கையாண்டு வெற்றி பெற்று விடுவார்கள் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் பும்ரா, அர்ஷ்தீப் சிங் என அனைவருமே சிறப்பாக பந்து வீசியிருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியால் 134 ரன்கள் மட்டும் தான் எடுக்க முடிந்திருந்தது. இதன் காரணமாக சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்திய அணி அடுத்து பங்களாதேஷ் மற்றும் அதை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியையும் சந்திக்க உள்ளது.

நிச்சயம் பேட்டிங்கில் உள்ள தவறுகளை திருத்திக் கொண்டு இந்திய அணி வரும் போட்டிகளில் களமிறங்கினால் வெற்றிகளை குவித்து இறுதிப் போட்டியிலும் முன்னேறி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கையில் டி20 உலக கோப்பை வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது பற்றி தற்போது பார்க்கலாம்.

இந்திய அணிக்கு எதிராக தற்போது நடந்து முடிந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஆல் அவுட்டாகி இருந்தது. மேலும் இந்த 10 விக்கெட்களுமே கேட்ச் மூலமாகத்தான் அவுட்டாகி இருந்தார்கள். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்த நிலையில், இதற்கு முன்பு ஒரே ஒரு முறை தான் டி20 உலக கோப்பையில் அனைத்து வீரர்களும் கேட்ச் அவுட்டாகி உள்ளனர்.

அதுவும் ஆப்கானிஸ்தான் அணிதான் என்ற சூழலில் கடந்த 2022 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணியின் அனைத்து வீரர்களும் கேட்ச் மூலமாக அவுட் ஆகி இருந்தனர். மீண்டும் ஒரு முறை ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணிக்கு எதிராக கேட்ச் மூலம் ஆல் அவுட்டாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...