ஒரு பார்வையில் ஹீரோக்களை மிரட்டும் நடிகையாக வாழ்ந்த நடிகை பானுமதி!

இன்றைய சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் நெருக்கமாக நடித்து எப்படியாவது பிரபலமடைந்து விட வேண்டும் என நினைக்கும் பல ஹீரோயின்களுக்கு மத்தியில் அந்த காலத்தில் பெண்களுக்கான தனி கட்டுப்பாடு, சுய ஆளுமை கொண்டு பல ஹீரோயின்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

அந்த வகையில் அழகான பொண்ணு தான் நான் அதுக்கேத்த கண்ணு தான், என்கிட்ட இருப்பதெல்லாம் தன்மானம் ஒன்னு தான் என தனது சொந்த குரலில் ஆடி, பாடி, நடித்த சூப்பர் ஹிட் கதாநாயகிகளில் ஒருவர் தான் நடிகை பானுமதி. இவர் கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்று பாடல் பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பானுமதி பழமொழி படங்களில் நடித்தது மட்டும் இன்றி திரைப்பட நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், பாடகி,தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பல துறைகளில் தன்னுடைய வெற்றி முத்திரையை பதித்தவர். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து கலக்கியுள்ளார்.

திரைப்படத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்கு 2003 ஆம் ஆண்டு பத்ம பூசன் விருது வழங்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டது. தமிழ் திரையுலகம் எத்தனையோ நடிகைகளை சந்தித்து இருக்கிறது. அவர்கள் எல்லோரிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர் நடிகை பானுமதி. நடிகைகளின் அவர் ஒரு துருவ நட்சத்திரம் என்று தான் சொல்ல வேண்டும்.

சினிமாவின் பல துறைகளில் வெற்றிகரமாக திகழ்ந்த பானுமதி நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை என்ற முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டார். திரைப்படங்களில் நடிக்கும் போது காட்சிக்காக கூட பானுமதியை தொட்டு பேச அஞ்சிவார்களாம் படத்தின் கதாநாயகர்கள்.

பல கதாநாயகர்கள் இந்த காட்சியில் இந்த வசனத்தை பேசும்போது உங்களது கையை தொடுவேன் என்று அவரிடம் முன்னதாகவே சொல்லிவிட்டு தான் அவரது கையை தொடுவார்களாம். அந்த அளவிற்கு பானுமதி கண்டிப்புடன் நடந்து கொள்ள கூடியவர். அவர் விருப்பம் இல்லாமல் யாரும் அவரை நெருங்க முடியாது.

மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என பல முன்னணி ஹீரோக்களுடன் பல படங்கள் இணைந்து நடித்த பானுமதி திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என நினைத்துள்ளார். ஆனால் ஸ்வர்க்க சீமா என்னும் படத்தில் நடிக்க வேண்டும் என இயக்குனர் விரும்பி கேட்டதின் பேரில் நடித்துள்ளார். ஆனால் அந்த படம் அவருக்கு பெரிய ஹிட் கொடுத்துள்ளது.

குழப்பத்திற்கு மத்தியில் மாஸ் அப்டேட் வெளியிட்ட சன் பிச்சர்ஸ்! உறுதியான ரஜினி – லோகேஷ் கூட்டணி!

அதை தொடர்ந்து அவர் பல படங்களில் நடிக்க தொடங்கினார். மேலும் பானுமதியும் அவர் கணவரும் இணைந்து ரத்னமாலா படத்தை தயாரித்துள்ளனர். அடுத்ததாக 1952இல் பரணி ஸ்டுடியோவைத் தொடங்கினார் பானுமதி .

மேலும் பானுமதி இயக்கிய முதல் படம் சண்டிராணி, அவர் நடித்த கடைசிப் படம் செம்பருத்தி. இவர் 2005 ஆண்டு காலமானார். அவர் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் மற்றும் நடிப்பு புகழ் என்னும் மறையாது.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews