இந்தி திணிப்பு கேள்விக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி : அதிர்ந்து போன நிருபர்

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய் சேதுபதி தற்போது பான் இந்தியா படங்களில் நடித்து தனது திறமையால் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இவரின் ஆரம்பப் படங்களில் கதாயாநாயகன் தோழனாக, துணைக் கதாபாத்திரம், வில்லன் என நடித்து பின் தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகன் அந்தஸ்தைப் பெற்றார். அப்படத்தின் வெற்றியால் தமிழ் சினிமாவில் யதார்த்த கதாயநாயகன் கிடைத்து விட்டார் என ரசிகர்கள் கொண்டாட மக்கள் செல்வன் ஆனால் விஜய் சேதுபதி.

தற்போது இவர் சேர்ந்து நடிக்காத உச்ச நட்சத்திரங்களே இல்லை எனும் அளவிற்கு வில்லன், குணச்சித்திரம், கதாநாயகன் என நடிப்பில் பல்வேறு பரிணாமங்களைக் காட்டி வருகிறார். தற்போது இவர் கேத்ரினா கைஃப்புடன் நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் படம் பொங்கலன்று ரிலீஸ் ஆகிறது. தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஏனெனில் பாலிவுட்டின் உச்ச நாயகியாக விளங்கும் கேத்ரினா கைஃப் உடன் இவரது காம்னேஷன் எப்படி இருக்கும் என ரசிகர்கள் இப்போதே எதிர்பார்க்கத் துவங்கிவிட்டனர்.

அண்மையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, இந்தி திணிப்பு பற்றி நிருபர் கேட்ட கேள்விக்கு பளார் பதிலை அளித்துள்ளார். இந்தியை தமிழ்நாடு எதிர்க்கிறதே என்ற அடிப்படையிலான செய்தியளார் கேள்விக்கு, “இங்க இந்தி படிக்க வேணாம்ன்னு சொல்லல. இந்தி திணிக்க வேண்டாம்ன்னு தான் சொல்றோம். ரெண்டுக்கு வித்தியாசம் இருக்கு. இப்பவும் இங்க இந்தி படிச்சிட்டுதான் இருக்காங்க, யாரு யாரையும் தடுக்கல..“ என பதில் அளித்துள்ளார்.

கடைசி வரை மனோரமாவின் நடிப்பைப் பாராட்டாத தாய்… லேடி சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?

ஏற்கனவே இந்தி திணிப்பு பற்றி தமிழ்நாட்டில் அவ்வப்போது சர்சைக் கருத்துக்கள் வெளியாகிவருகிறது. சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமா பிரபலங்கள் “இந்தி தெரியாது போடா“ என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட்டை அணிந்து அதை டிரண்ட் ஆக்கினர். அது மட்டுமின்றி இந்தி எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய போராட்டங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதியின் இந்தக் கருத்து தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...