சினிமா மூலம் சுதந்திர புரட்சி செய்த பிரபலம்.. அட, இவரோட மகன் தான் அந்த பிரபல நடிகரா..

சினிமா துறையில் பலரும் வெறுமென ஒரு துறையில் மட்டும் சாதிக்காமல், தங்களுக்கு விருப்பம் இருக்கும் மற்ற துறையிலும், திறமையுடன் சாதிக்கவும் துடிப்பார்கள். அந்த வகையில், தமிழ் சினிமாவில் சாதித்த பலரை சொல்லிக் கொண்டே போகலாம்.

அதில் மிக முக்கியமான ஒருவர் தான் நாகேந்திர ராவ். இவர் சிறந்த நடிகராக பெயர் எடுத்துள்ளதுடன் திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் என பல துறைகளிலும் தனது தனி முத்திரையை பதித்துள்ளார்.

நடிகர் நாகேந்திர ராவ் 1896 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி மைசூரில் பிறந்தார். ஆங்கிலேயர் ஆட்சியில் இருக்கும் போது பிறந்த நாகேந்திர ராவ், தனது மனதில் சுதந்திர தாகம் நீங்கா இடம் பெற்றிருந்தது. இதனால், அவர் சுதந்திரம் சம்பந்தப்பட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றது.

முதலில் நாடகங்களில் நாகேந்திர ராவ் நடித்துக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. அவர் முதல் முதலாக ஒரு தெலுங்கு திரைப்படத்தில் தான் 1932 ஆம் ஆண்டு நடித்தார். அதன் பிறகு 1933 ஆம் ஆண்டு ’பாரிஜாத புஷ்பகரணம்’ என்ற தமிழ் படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் நாரதர் வேடத்தில் நடித்திருந்தார்.

இதனையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நாகேந்திர ராவ், சில படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராகவும், இயக்குனராகவும் பணிபுரிந்தார். இது தவிர ஐந்து படங்களை சொந்தமாக தயாரிக்கவும் செய்துள்ளார்.

தமிழில் அவர் எம்கே ராதா மற்றும் பானுமதி நடித்த ’அபூர்வ சகோதரர்கள்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் தான் அவருக்கு மிகப்பெரிய பெயர் மற்றும் புகழை பெற்று கொடுத்தது. இதனிடையே, அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் ஒரு படத்தை இயக்கினார். தமிழில் ’ஜாதகம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்த இந்த படம் முழுக்க முழுக்க காமெடி படமாக அமைந்ததுடன் 3 மொழிகளிலும் இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தது.

இதனையடுத்து அவர் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார். குறிப்பாக கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் தான் அவருக்கு தமிழில் அமுதவல்லி என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் பின்னர் அவர் தமிழில் நடிக்கவில்லை என்றாலும் ஏராளமான பிற மொழி திரைப்படங்களில் நடித்தார்.

கடந்த 1974 ஆம் ஆண்டு ’ப்ரொபசர் பூசாரி’ என்ற கன்னட படத்தில் நடித்த நிலையில் அதன் பிறகு இவர் நடிக்கவில்லை. இந்த நிலையில், 1977 ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி நாகேந்திர ராவ் காலமானார். இவர் ரத்னா பாய், கமலாபாய் ஆகிய இரண்டு பெண்களை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் உள்பட பல மொழிகளில் வில்லன் கேரக்டரில் நடித்த நடிகர் சுதர்சன் இவருடைய மகன்களில் ஒருவர் ஆவார். நடிகர் நாகேந்திர ராவின் கலைச்சேவையை பாராட்டி அவருக்கு கடந்த 1976 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...