இந்த படத்தோட டைட்டிலை எங்கே சார் பிடிச்சீங்க… முந்தானை முடிச்சு மலரும் நினைவுகள்!

முந்தானை முடிச்சு படத்தின் மலரும் நினைவுகளை பகிரும் வகையில் இயக்குநர் பாக்யராஜ் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் திரைக்கதை என்றால் இயக்குநர் பாக்யராஜ் தான் என்ற தனி சிறப்பை பெற்றுள்ளார். 1979ல் சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். அவர் இயக்குநராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் கொடிகட்டி பறந்தார்.

இவருடைய இயக்கத்த்தில் வந்த அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன. இவர் தனது மகனை வைத்து ‘சித்து +2’ படத்தை இயக்கியிருந்தார். அதுவே அவர் இயக்கிய கடைசி படமாகும். இந்நிலையில், அவர் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான முந்தானை முடிச்சு படத்திற்கு எவ்வாறு வந்தது என்பது குறித்து அப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்த ஊர்வசியிடம் தெரிவித்துள்ளார்.

முந்தானை முடிச்சு டைட்டில் எப்படி வந்தது?

முந்தானை முடிச்சு படத்தோட டைட்டில் எப்படி சார் பிடிச்சிங்க உங்க ஐடியாவா இருந்ததா? என நடிகை ஊர்வசி பாக்யராஜிடம் கேட்டுள்ளார். அதற்கு பதில் கூறிய அவர், “ஒரு படத்திற்கு கதை எந்த அளவுக்கு முக்கியமோ அதேமாதிரி படத்திற்கு தலைப்பும் ரொம்ப முக்கியம். படத்தின் தலைப்பு மக்களுக்கு பிடிச்சமாதிரியும் இருக்க வேண்டும். படமும் பிசினஸ் ஆக வேண்டும். அப்பதான் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகும்.

பெண்களை மையப்படுத்தி வரும் கதையா இருப்பதால், நம்ம ஊர்ல முந்தானையை முடிச்சு கட்டு, புருஷனை முடிச்சு வைச்சுக்கிட்டா பாருன்னு விளையாட்டா கிராமத்துல பேசிக்கொள்வதை கவனிச்சிருக்கேன். அப்பதான் இதையே படத்தோட டைட்டிலா வைச்சிடுவோம் முடிவெடுத்தேன். முந்தானை முடிச்சுனு யாரும் சொல்லிக்கொள்வது இல்லை.

images

அந்த படத்தோட டைட்டில் வைச்சு போஸ்டர் வெளியான பின்பு பலரும் என்னிடம் ஒரு வித்தியாசமான பதிலை தந்தது ஆச்சர்யமா இருந்தது. “முந்தானை முடிச்சு” ஏழு எழுத்தில் வருவதால் படத்தோட தலைப்பை நியூமராலஜி பார்த்து, ஒத்தப்படையில் வைச்சிருக்கீங்கனு சொன்னாங்க. ஆனால், அப்படியில்லை, போஸ்டரை டிசைன் செய்தவர் வித்தியாசமா இருக்கனுங்கறதுக்காக மாற்றி அமைச்சார் இதை இந்த வீடியோ மூலமா பதிவு பன்றேன் என தெரிவித்தார்.

கதையை சொல்லிடாதம்மா

படப்பிடிப்பு முடிந்து முந்தானை முடிச்சு வெளியாக ஒரு வாரம் இருந்தது. அப்போது படம் வெளியாவதற்கு முன்பு கதையை யார்கிட்டயும் சொல்லிடாதம்மா தயாரிப்பாளர் தன்னிடம் சொன்னதாக நடிகை ஊர்வசி தெரிவித்தார். கதை தெரிந்துவிட்டால் படம் பார்க்கும் ஆர்வம் போய்விடும் என்பதை அப்போது புரிந்துகொண்டேன் என்றும் ஊர்வசி கூறினார். முந்தானை முடிச்சு படத்தில் வந்த முருங்கைக் காய் காட்சி இப்போது பல படங்களில் வர ஆரம்பித்துவிட்டன. தன்னிடமே இந்த காட்சி நடிக்க முடியுமான்னு கேட்குறாங்க சார் என்று ஊர்வசி தெரிவித்தார்.

1983ல் வெளிவந்த முந்தானை முடிச்சு திரைப்படம் கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...