தீபாவளிக்குள் 5ஜி சேவை: முகேஷ் அம்பானி அறிவிப்பு!!

இந்தியாவில் வருகின்ற தீபாவளி முதல் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் 5 ஜி சேவை தொடங்கப்பட இருப்பதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

முகேஷ் அம்பானியின் தலைமையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45-வது கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரிலையன்ஸ் முதலீட்டாளர்கள் மற்றும் எதிர்கால முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் அடுத்த நிதியாண்டு மற்றும் வருங்காலத்திற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் 5 ஜி சேவை வழக்குவதை இலக்காக கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

அதன் ஒருபகுதியாக முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் 5 ஜி சேவை தொடங்கப்பட இருப்பதாகவும், 2023-ம் ஆண்டிற்குள் மாவட்டங்கள், கிராமங்களில் ஜியோ சேவை வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு 2.3 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.