44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி-பெண்கள் பிரிவில் மூன்றாவது அணி அறிவிப்பு!!!

சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சென்னை மாநகர முழுவதும் அதிதீவிரமாக நடைபெற்று கொண்டு வருகிறது.

சென்னை ஓஎம்ஆர் சாலையில் வரிசையாக செஸ் பாதகைகள், வரவேற்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அதிலும் குறிப்பாக நேற்றைய தினம் ஏ.ஆர்.ரகுமான் செஸ் தீம் பாடலை வெளியிட்டார். அந்த பாடல் இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மூன்றாவது பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சார்பில் பெண்கள் பிரிவில் பங்கேற்கும் மூன்றாவது அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆண்கள் பிரிவில் மூன்று அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பெண்கள் பிரிவில் மூன்றாவது அணி அறிவிக்கப்பட்டது.

44 வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆண்கள் பிரிவில் 188 அணிகள் எனவும் பெண்கள் பிரிவில் 162 அணிகள் பங்கேற்க உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.