இனி பேஸ்ட் வாங்கும் போதுஇதை எல்லாம் பாத்து வாங்கணும்.. நம்மில் பலரும் அறியாத ஆபத்துக்கள்!

நாம் எல்லாருமே தினமும் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்று பேஸ்ட். தினமும் பற்கள் பளபளக்க பயன்படுத்துகிற அந்த பேஸ்ட் எப்படி பாத்து வாங்கணும்னு என நம்மல்ல பலருக்குத் தெரியாது.

பொதுவாக நாம் அனைவரும் விளம்பரத்தை பார்த்து அதில் மயங்கி எதோ ஒரு பேஸ்ட் வாங்கி பயன் படுத்துகிறோம். ஆனால் அது தவறானது, அதற்கு பதிலாக நாம் வாங்கும் பேஸ்ட்டில் பற்கள் வலுவாக இருக்குமா, பற்களில் சொத்தை ஆகாமல் இருக்குமா, பற்கள் வெள்ளையாக இருக்குமா, பற்களில் கரை இருந்தால் என்ன பேஸ்ட் வாங்க வேண்டும் , பற்களில் கூச்சம் இருந்தால் என்ன பேஸ்ட் வாங்க வேண்டும் என
பல முறை உள்ளது.

நாம் சந்தைகளில் வாங்கும் பல நிறுவனத்தின் பேஸ்ட்களில் உப்பு உள்ளது சாக்கோல் உள்ளது என கூறி விளம்பரம் செய்கிறார்கள். அதை பார்த்து நாமும் வாங்குகிறோம். அது தவறானது. நாம் பயன் படுத்தும் எல்லா பேஸ்ட்களிலும் நம்ம பற்களை பாதுகாப்பாக வைக்க பளபளப்பாக வைக்க சுத்தமாக வைக்க பல நாட்கள் கெடாமல் வைக்க வாசனையாக வைக்க , வெள்ளையாக வைக்க என பல கெமிக்கல் பொருட்கள் தான் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் இந்த கெமிக்கல் பொருட்கள் இருப்பதால் தான் கால்சியம் ,பாஸ்பரஸ், விட்டமின் சி , மெக்னீசியம் என அனைத்து சத்துக்களும் கொடுக்கிறது.

அதற்காக இந்த சத்துக்கள் அதிகமாக நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக நாம் தினமும் அதிக நேரம் பல் துலக்க கூடாது. தினமும் ஒரு நாளைக்கு 2 முதல் 3 நிமிடங்கள் தான் நாம் பல் துலக்க வேண்டும். அதை மீறி அதிக நேரம் விலக்கினால் நம் பற்களின் அடர்த்தி குறைந்து பற்களில் கூச்சம் வந்து விடும்.

மேலும் முக்கியமாக விளம்பரங்களில் காட்டுவது போல ஒரு பிரஸ் முழுவதும் நாம் பேஸ்ட் வைக்க கூடாது. பெரியவர்களுக்கு ஒரு முழு கொண்டக்கடலை அளவும் சிறியவர்களுக்கு பாதி கொண்டக்கடலை அளவும் தான் பயன்படுத்த வேண்டும்.

அடுத்ததாக நாம் பயன் படுத்தும் பேஸ்ட்டில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. பேஸ்ட்டில் புளோரைடு உள்ளதா என்பது கவனிக்க வேண்டும்.புளோரைடு என்பது பற்களில் உள்ள கிருமிகளை அளிக்க கூடிய இயற்கையான தனிமப்பொருள்.

குறிப்பாக நாம் குடிக்கும் தண்ணீரிலும் புளோரைடு உள்ளதால் தான் நம் எலும்புகள் தேய்மானம் அடையாமல் பாதுகாப்பாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் பற்கள் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் நாம் உபயோகப்படுத்தும் பேஸ்ட்டால் மட்டும் வருவது இல்லை நம் பிரஸ் காரணமாகவும் வரலாம்.

நாம் பேஸ்ட் வாங்கும் போது கவனிக்க வேண்டிய 4 குறிப்புகள்:-

நாம் பேஸ்ட் வாங்கும் போது அட்டையில் காலாவதி ஆனதா இல்லையா என பார்க்க வேண்டும்.

நம் வீடுகளில் சிலருக்கு கிராம்பு வாசனை சேராது அதனால் அதை கவனித்து வாங்க வேண்டும்.

மேலும் சிலருக்கு வாய்ப்புண் வரும் அப்படி வருபவருக்கு SLS இல்லாத பேஸ்ட் வாங்க வேண்டும்.

குறிப்பாக ADA முத்திரை உள்ளதா என பார்க்க வேண்டும்.

இது தான் பேஸ்ட் வாங்குவதற்கு முக்கிய தகுதிகள் .

 

 

 

 

 

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.