Vijay students meet| விஜய் வீட்டு விருந்து.. என்ன என்ன ஐட்டங்களோ.. திருவான்மியூரே மணக்குதே

சென்னை: நடிகர் விஜய் திருவான்மியூரில் நடத்தும் நிகழ்ச்சியில் வருவோருக்கு மதிய விருந்தாக வழங்கப்படும் உணவுகள் லிஸ்ட் மிகப்பெரியதாகும். அதேபோல் மாணவர்களுக்கு வழங்கப்படும் பரிசு தொகை பற்றியும் பார்ப்போம்..

தமிழகத்தில் சட்டசபை தொகுதி வாரியாக 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவியரை தேர்வு செய்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழ்ங்கும் திட்டத்தை நடிகர் விஜய் கடந்த ஆண்டு நடத்தினார். அதன் பின்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அதிகரப்பூர்வமாக விஜய் தொடங்கிய நிலையில், 2026-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வோம் என்று அறிவித்தார்.

இந்த நிலையில், இந்த முறை பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா , இன்றும், ஜூலை 3-ம் தேதியும் என 2 கட்டங்களாக கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று நிகழ்வில் முதல் கட்டமாக 21 மாவட்டங்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விருது வழங்கி வருகிறார்.

இந்த விழாவில் அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய 21 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இந்த விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வைர மோதிரம், 5000 மதிப்பிலான காசோலையை விஜய் வழங்கி வருகிறார்.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு மதிய உணவாக சாதம், கதம்ப சாம்பார், வத்தக்குழம்பு, தக்காளி ரசம், மோர், உருளை காரக்கறி, அவரை மணிலா பொரியல், அவியல், இஞ்சி துவையல், ஆனியன் மணிலா, தயிர் பச்சடி, அப்பளம், வடை, வெற்றிலை பாயாசம் உள்பட 15 ஐட்டங்கள் வழங்கப்பட உள்ளது. இன்று சைவ சாப்பாடு மட்டுமே மாணவர்களுக்கு மதிய உணவாக வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டும் சைவ சாப்பாடு மட்டுமே விருந்தாக வழங்கப்பட்டது. அதேநேரம் பனையூரில் நடைபெறும் ரசிகர்கள் சந்திப்புகளில் பொதுவாக பிரியாணி வழங்கப்படும்

விஜய் மேடைக்கு வரும் ஒவ்வொரு மாணவ மாணவியர் மற்றும் பெற்றோருடன் புகைப்படம் எடுப்பபதுடன் அவர்களுக்கு அந்த புகைப்படத்தை உடனே தரவும் ஏற்பாடு செய்துள்ளார்..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews