அஜித் படத்திலிருந்து நீக்கம்.. இயக்குனர் வேலையிலிருந்து வேறு வேலைக்கு மாறிய விக்னேஷ் சிவன்! இப்படி ஒரு நிலமையா?

இயக்குனர் விக்னேஷ் சிவன், இயக்கத்தை விட்டு விட்டு வேறு ஒரு பணிக்கு மாறியுள்ளார்.

தமிழ் சினிமாவில்’போடா போடி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.

அவர் சமீபத்தில் இயக்கியிருந்த “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகி இருந்தது. இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியிலும் இந்த திரைப்படம் கனிசமான வரவேற்பை பெற்றது.

WhatsApp Image 2023 06 16 at 10.45.39 PM 1

பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். மகாபலிபுரத்தில் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என சமீபத்தில் விக்னேஷ் சிவன் அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் நடிப்பில் AK62 படத்தை இயக்க இருப்பதாக கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தின் திரைக்கதையை முடிக்காத காரணத்தால் அஜித் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக இயக்குனர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தை இயக்க உள்ளார்.

WhatsApp Image 2023 06 16 at 10.45.39 PM

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், ஜி தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணிபுரிய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஃபி வித் டிடி போன்ற ஒரு நிகழ்ச்சியை விக்னேஷ் சிவன் தொகுத்து வழங்க உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்கும் ஆறாவது படத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...