தனது இரட்டை குழந்தையின் முகத்தை வெளி உலகிற்கு காட்டிய விக்கி – நயன் தம்பதியினர்!

தென்னிந்திய திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவிற்கு ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து விஜய், அஜித், ரஜினி என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இவர் தமிழில் மட்டும் இன்றி மலையாளத்திலும் பல படங்கள் நடித்துள்ளார். சமீபத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஹிந்தியில் ஜவான் படத்தில் இணைந்து நடித்துள்ளார் நயன்தாரா. அடுத்ததாக வரும் செப்டம்பர் 28ஆம் தேதி ஜெயம் ரவி – நயன்தாரா இணைந்து நடித்த இறைவன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அந்த வகையில் நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நானும் ரவுடி தான். இந்தத் திரைப்படம் நயன்தாராவின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. அதுவரை சிங்கிளாக இருந்த நயன்தாரா இந்த படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்தார். இருவருக்கும் இந்த படத்தின் மூலமாக காதல் மலர்ந்தது.

ஏழு வருடங்களாக ரகசியமாக காதலித்து வந்த இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசாட்டில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

https://www.instagram.com/p/CxpOOlORy__/?utm_source=ig_web_copy_link

naya VI

அதைத்தொடர்ந்து திருமணமான சில மாதங்களில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அறிவித்திருந்தனர். வாடகை தாயின் மூலமாக அவர்கள் குழந்தை பெற்றெடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது குழந்தைக்கு உலகம், உயிர் என அவர்கள் பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறப்பிற்கு பின் அதிக நேரம் குழந்தையுடன் செலவிட்டு வரும் நயன்தாரா அவ்வப்பொழுது அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம்.

ஆனால் ஒருபொழுதும் தனது குழந்தையின் புகைப்படங்களை வெளிப்படையாக வெளியிட்டதில்லை. அந்தப் படங்களில் குழந்தைகளின் முகத்தில் இமோஜ் வைத்து வரைந்து மறைத்தவாரோ அல்லது குழந்தைகளின் பின்புறத்தை மட்டுமே சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளார்.

சீரியலா வேண்டவே வேண்டாம் என ஓட்டம் எடுத்த விஜய்யின் அப்பா!

இந்நிலையில் முதல் முறையாக தனது இரட்டை குழந்தைகளின் முகத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். இதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து நின்று ஆளுக்கு ஒரு குழந்தையை கையில் வைத்துள்ள புகைப்படத்தை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews