சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ.. உருக வைத்த யுவன்.. கரைய வைத்த விஜய் – பவதாரிணி குரல்

தளபதி விஜய் நடிக்கும் 68-வது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில் படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் முதல் சிங்கிளான விசில் சாங் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றது. இந்தப் பாடலை விஜய் பாடியிருந்தார். இப்பாடலில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் இணைந்து நடனமாடியிருந்தனர்.

தற்போது இன்று விஜய்யின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் 2-வது பாடலை படக்குழு வெளியிட்டது. இதற்கான புரோமோ வீடியோவை நேற்றே வெளியிட்டனர். இன்று மாலை 6 மணிக்கு வெளியான இப்பாடலையும் விஜய்யுடன் இணைந்து, மறைந்த பாடகியும், இளையராஜாவின் மகளுமான பவதாரிணி இளையராஜா பாடியிருக்கிறார். இதில் பவதாரிணியின் குரல் AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலுக்கான பணிகளின் போதுதான் யுவனின் அக்கா பவதாரிணி இறந்த செய்தி கிடைத்தாக உருக்கமுடன் பதிவொன்றை போட்டிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

எனினும் அக்காவின் குரலை மீண்டும் உலகம் கேட்க வேண்டும் என்பதற்காக AI தொழில்நுட்பம் மூலமாக சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ.. என கபிலன் வைரமுத்து வரிகளில் மீண்டும் உருக வைத்திருக்கிறார் யுவன்.

அஜீத் கொடுத்த முதல்பட அட்வான்ஸ்.. பொக்கிஷமாக பாதுகாக்கும் பிரபல இயக்குநர்..

யுவன் இசையில் இப்பாடலையும் விஜய்யே பாடியிருக்கிறார். பாடல் வெளியான சில மணி நேரத்தில் 1மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்தது. காதலுக்கு மரியாதை படத்தில் ஓ பேபி பேபி பாடலை பவதாரியுடன் இணைந்து விஜய் பாடியிருந்தார். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இவர்கள் இருவரின் குரல் ரசிகர்களை உருக வைத்திருக்கிறது.

இப்பாடலில் விஜய், சினேகா காம்பினேஷன் வசீகரா படத்திற்குப் பிறகு மீண்டும் பிரஷ்ஷாக இருக்கிறது. மிகவும் மெலடியாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. யுவனின் இசை மாயாஜாலம் காட்டியிருக்கிறது.  மேலும் மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு சில காட்சிகள் AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews