‘ஜெயிலர்’ படத்தில் தமன்னாவின் கதாபாத்திரம் என்ன தெரியுமா? கலக்கல் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பல நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் நேற்று நடைபெற்றது.

இப்படத்தில் சிவராஜ் குமார், மோகன் லால், ஜாக்கி ஷெராப், சுனில், வசந்த் ரவி, விநாயகன் மற்றும் யோகி பாபு ஆகியோர் அடங்கிய நட்சத்திர பட்டாளம் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமத்துள்ளார். விஜய்யை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படம் கலவையான விமர்சனத்தை பெற்றதால் இப்படத்திற்கு ரசிகர்கள் இடையே மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நெல்சன் திலீப்குமார் பூர்த்தி செய்வாரா இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதற்கிடையில் இப்படத்தில் இருந்து வெளியான காவாலா பாடல் ரசிகர்கள் இடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது. இதன் மூலம் தமன்னா இப்படத்தில் நடிக்கிறாரா இல்லையா அவருக்கு இப்படத்தில் கதாபாத்திரம் எதுவும் இருக்கிறதா அல்லது வெறும் பாடலுக்கு மட்டும் தான் வருவாரா என பல கேள்விகள் ரசிகர்கள் இடையே வந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை தமன்னா கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்படத்தில் அவர் ஒரு தெலுங்கு திரைப்பட நடிகையாக நடிக்கிறார் என்றும், அதனால்தான் அவரது ஐட்டம் டான்ஸ் பாடலான ‘காவாலா’-வில் தெலுங்கு வார்த்தைகள் அதிகம் உள்ளன எனவும் கூறப்படுகிறது. அவர் ரஜினியுடன் ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் பாடலைத் தவிர அவருடன் ஒரு சில காட்சிகளில் அவர் நடித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...