என்னது மீண்டும் ‘முதல்வன்’னா? பெரிய ஆஃபரை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்.. என்ன மேட்டர் தெரியுமா?

சிவகார்த்திகேயன் லைன் அப்பில் அடுத்தடுத்த பல படங்கள் வரிசை கட்டி நின்று கொண்டிருக்கின்றன. தற்போது வெங்கட் பிரபு விஜயை வைத்து கோட் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த படம் முடிந்த பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருக்கிறார்.

அந்த படத்தை சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.இன்று கோலிவுட்டில் ஒரு மிகப்பெரிய அந்தஸ்துடன் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் என பன்முக திறமைகள் கொண்ட ஒரு பெரிய நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன்.

அவருடைய நடிப்பில் பல வெற்றி படங்கள் தமிழ் சினிமாவை அலங்கரித்து இருக்கின்றன. காமெடி ஜோனில் இருந்து இன்று ஒரு ஆக்சன் ஹீரோவாக தன்னை அடுத்த கட்ட பரிமாணத்திற்கு உயர்த்தி இருக்கிறார். அஜித் விஜய் சூர்யா இவர்களுக்கு அடுத்த இடத்தில் இப்போது சிவகார்த்திகேயன் தான் இருக்கிறார்.

சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திற்கும் இந்த அளவு ஒரு மாஸ் வளர்ச்சியை எட்டி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் அவர் தற்போது ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் இவர்கள் இணையும் இந்த படத்தின் கதை பற்றிய ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் இந்த பட வாய்ப்பை மறுத்ததாகவும் அதன் பிறகு இப்பொழுது ஓகே சொன்னதாகவும் தெரிகிறது. அதற்கு காரணம் இந்த கதை கிட்டத்தட்ட முதல்வன் பட கதை போல ஒரு பாலிடிக்ஸ் கதையாக இருக்கும் என்ற காரணத்தினால் தான்.

சிவகார்த்திகேயன் முதலில் யோசித்தாராம் .ஆனால் இப்போது இந்த கதையில் நடித்தால் ஒரு நல்ல ரீச் இருக்கும் என அவர் நினைத்திருக்கிறார் போல. அதனால் ஓகே சொல்லி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் வெங்கட் பிரபுவின் சம்பளம் இழுபறியில் இருக்கிறதாம். வெங்கட் பிரபுவுக்கு உண்டான சம்பளத்தை சத்யஜோதி பிலிம்ஸ் கொடுக்க தயங்குகிறதாம் .

ஆனால் வெங்கட் பிரபுவிடம் சிவகார்த்திகேயன் முதலில் அட்வான்ஸ் வாங்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு நாம் பேசிக் கொள்ளலாம் என கதையின் மீதுள்ள நம்பிக்கையை வைத்து சிவகார்த்திகேயன் இந்த மாதிரி கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கு இந்த கதை கண்டிப்பாக பெரிய ஒரு ஹிட் ஆகும் என நினைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews