சிஎஸ்கேவுக்கு எதிராக இத்தனை வருசமா எந்த கேப்டனுக்கும் வராத தைரியம்.. சரித்திரம் படைத்த கில்..

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளிலேயே, சிஎஸ்கேவுக்கு எதிராக எந்த அணியின் கேப்டனுக்கும் வராத ஒரு தைரியம் குஜராத் கேப்டன் கில்லுக்கு வந்ததை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம். இந்த சீசனுக்கு இடையே தான் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் சுப்மன் கில்லுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என கருதப்பட்ட நிலையில் அவரது பெயர் ரிசர்வ்டு வீரர்கள் பட்டியலில் தான் இடம் பெற்றிருந்தது.

அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் இந்திய அணியின் தொடக்க வீரருக்கான இடத்தை பெற்றிருந்த நிலையில் கில் நிச்சயம் இந்திய அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்துக்களும் பரவலாக இருந்து வந்தது. ஜெய்ஸ்வாலை போலவே சிறப்பான தொடக்க வீரராக இறங்கி ரன் சேர்க்கும் திறன் படைத்த கில், ஏன் அணியில் இடம்பெறாமல் ரிசர்வ்டு வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் பிசிசிஐயின் முடிவை விமர்சித்து வந்தனர்.

இதற்கு மத்தியில் தான் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இயங்கி வரும் சுப்மன் கில், மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த இரண்டு சீசனிலும் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்த குஜராத் அணி இந்த முறை தடுமாறி வந்தாலும் 12 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று இன்னும் பிளே ஆப் வைபை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இதுவரை 12 போட்டிகள் ஆடி உள்ள கில் 426 ரன்கள் குவித்துள்ளதுடன் மட்டுமில்லாமல் சமீபத்தில் சிஎஸ்கே எதிராக நடந்து முடிந்த போட்டியில் சதம் அடித்தும் பட்டையை கிளப்பி இருந்தார். இந்த போட்டியில் அவரும் சுதர்சனும் இணைந்து 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் குவித்ததால் தான் சென்னை அணியை மிக எளிதாகவும் அவர்கள் வீழ்த்தி இருந்தனர்.

இந்திய டி20 உலக கோப்பை அணியில் தேர்வாகாமல் போனதன் பிறகு நல்ல பேட்டிங்கை கில் வெளிப்படுத்தி வருவதால் 25 ஆம் தேதிக்குள் நிச்சயம் இந்திய அணியில் இடம் பெற்று விடுவார் என்றும் தெரிகிறது.

அப்படி இருக்கையில் தான் ஐபிஎல் வரலாற்றிலேயே சிஎஸ்கே அணிக்கு எதிராக எந்த கேப்டனும் செய்யாத ஒரு விஷயத்தை கில் தற்போது செய்து முடித்துள்ளார். 17 வது ஐபிஎல் சீசன் நடந்து வரும் நிலையில் இதுவரை ஏறக்குறைய 280 போட்டிகள் வரை சிஎஸ்கே அணி ஆடி உள்ளது. ஆனால் ஒரு போட்டியில் கூட எதிரணியின் கேப்டன்கள் அவர்களுக்கு எதிராக சதமடித்தது கிடையாது.

இந்த நிலையில் தான் முதல் முறையாக சுப்மன் கில் ஒரு கேப்டனாக சென்னை அணிக்கு எதிராக சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் தற்போது படைத்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...