நாடாளுமன்றத்தில் செங்கோலுக்குப் பதிலா இத வையுங்க.. சபாநாயகருக்கு சமாஜ்வாதி எம்.பி. பரபரப்பு கடிதம்

இந்திய கலாச்சாரத்தில் மன்னர்கள் கால ஆட்சி முறையில் இருந்து பின்பற்றப்படும் ஒரு மரபு நடைமுறை ஆட்சியில் உள்ளவர்கள் செங்கோல் வைத்திருப்பது மரபு. நீதி நெறி தவறாமல், நடுவுநிலையுடன் மன்னர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில் மன்னர்கள் கையில் செங்கோல் இருக்கும். எனவே இத்தகையை சிறப்பு வாய்ந்த செங்கோலை கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்ட புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கையின் அருகில் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

ஆங்கிலயேர்களிடமிருந்து இந்தியாவிற்கு அதிகாரப் பரிமாற்றம் நடந்த பொழுது 1947 பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களிடம் செங்கோல் வழங்கப்பட்டது. சோழப் பேரரசின் ஆட்சிக்கு அடையாளமாகத் திகழ்ந்த இந்த செங்கோல் உத்திரப்பிரதேசம் பிரயாக்ராஜ் நகர் நேரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

விடுதலைப் பெருவிழாவின் அமுத விழாவான 75 -வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் இந்தச் செங்கோலை புதிய நாடாளுமன்றத்தில் வைக்க பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி இந்தச் செங்கோல் அருங்காட்சியகத்திலிருந்து எடுக்கப்பட்டு டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்தச் செங்கோலை தமிழகத்தினைச் சேர்ந்த ஆதினங்கள் பிரதமர் மோடியிடம் வழங்கினர். அதனை அவர் சபாநாயகர் இருக்கையின் அருகில் வைத்தார். தற்போது தமிழனின் பெருமை பேசும் இந்தச் செங்கோலை இங்கே வைப்பது தேவையற்றது என சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஆர்.கே.சவுத்ரி கோரிக்கை வைத்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை இன்னும் கிடைக்கலையா..? முதல்ல இதப் பண்ணுங்க.. அரசின் முக்கிய அறிவிப்பு

அவர் விடுத்த கோரிக்கையில் நாடாளுமன்றத்தில் இருக்கும் செங்கோலை அகற்ற வேண்டும். மன்னர்களே கையில் செங்கோலுடன் இருப்பர். நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு அருகில் வைப்பது ஏற்புடையது அல்ல. செங்கோலுக்குப் பதிலாக அரசியல் அமைப்பின் மாதிரியை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழனின் அடையாளம் நாடாளுமன்றத்தில் வீற்றிருப்பது கண்டு பெருமை கொள்ளும் தமிழர்கள் ஆர்.கே.சவுத்திரியின் இந்த கோரிக்கைக்கு கமெண்ட்டுகளில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழக எம்.பி.கள் இதுவரை மௌனம் காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews