பேசிக்கவே மாட்டார்கள்….. சரோஜா தேவிக்காக போன சாவித்ரி….. ஆச்சர்யமாக பார்த்த திரைவட்டாரம்…..!!

1960களில் கொடி கட்டி பறந்த நடிகைகள் சாவித்திரி, பத்மினி, சரோஜா தேவி. இவர்கள் மூன்று பேரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் கிடையாது. நடிப்பாகட்டும் நாட்டியமாகட்டும் அனைத்திலும் மூன்று பேரும் தனித்துவமாக விளங்குபவர்கள். தேசிய விருது பெற்ற மகாகவி காளிதாசா எனும் கன்னட படத்தில் கதாநாயகியாக அறிமுகமானதன் மூலம் திரைத்துறையில் அடி எடுத்து வைத்தவர் சரோஜா தேவி.

நடிகையர் திலகமாக வளம் வந்த சாவித்திரி பல பிரச்சனைகளில் சிக்கி சிரமத்திற்கு உள்ளாகி தனது முடிவுகளால் தொழிலில் பிரச்சனைகளை ஏற்படுத்திக்கொண்ட நேரம் அது. நாடோடி மன்னன் திரைப்படம் மூலம் தமிழில் சரோஜா தேவி அறிமுகமானார். சுமார் 50 ஆண்டு காலமாக திரைத்துறையில் நின்று காட்டிய இவர் நடிகையர் திலகம் சாவித்திரியையே முந்தி சென்றார். சரோஜாதேவியும் சாவித்திரியும் இணைந்து நடித்த படம் தான் பார்த்தால் பசி தீரும்.

Saroja Savithri

பொதுவாக இரண்டு கதாநாயகிகள் இணைந்து நடித்தால் இருவரும் கதை பேசிக்கொண்டே இருப்பார்கள் என்று கூறப்படும். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சி எடுத்து முடித்த பிறகு சரோஜாதேவியும் சாவித்திரியும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவே மாட்டார்களாம். வெவ்வேறு திசையில் அமர்ந்து கொண்டு அமைதியாக இருப்பார்களாம்.

அதுமட்டுமில்லாமல் நிகழ்ச்சி ஒன்றில் சரோஜா தேவி  பங்கேற்ற போது தன்னுடன் நடித்த நடிகர் நடிகைகள் பற்றி பெருமையாக பேசியுள்ளார். ஆனால் அப்போதும் அவர் சாவித்திரி பற்றி எதுவும் அதிகமாக சொல்லிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. திரையுலகில் நடிகையர் திலகமாக வளம் வந்த சாவித்திரியை திடீரென புதிதாக வந்த சரோஜாதேவி முந்தி சென்றது தான் இவர்கள் இருவர் இடையே பிரச்சனைக்கு காரணமா என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை.

ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை என்பது கிடையாது என பலரும் தெரிந்து வைத்தது தான். இந்நிலையில் சரோஜாதேவிக்கு திருமணம் முடிந்த புதிதில் பெற்றால்தான் பிள்ளையா என்ற சரோஜாதேவியின் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் அறிஞர் அண்ணா சிறப்பு விருந்தினராக பங்கேற்று விருதுகள் வழங்கினார்.

maxresdefault 1

ஆனால் அந்த விருது வழங்கும் விழாவிற்கு புதிதாக திருமணம் முடிந்த சரோஜாதேவியால் வர முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் படத்தின் கதாசிரியர் ஆரூர் தாஸ் சாவித்திரியை விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்று சரோஜாதேவிக்கு பதிலாக அண்ணா கையிலிருந்து விருதை வாங்க கூறியுள்ளார். முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த சாவித்திரி பின்னர் கதாசிரியர் ஆரூர் தாஸுடன் இருந்த நட்புக்காக ஒப்புக்கொண்டு உள்ளார்.

இவர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேதாசுற்றபோது அங்கிருந்தவர்களே ஆச்சரியமாக  தான் சாவித்திரியை பார்த்தார்கள். ஏனென்றால் சரோஜாதேவி பங்கு பெற வேண்டிய இடத்தில் சாவித்திரிக்கு என்ன வேலை என்று அனைவரும் யோசித்தார்கள். அந்த அளவிற்கு இவர்கள் இருவருக்கும் பொருந்தாது என அனைவருக்கும் தெரிந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...