கம்பேக் கொடுத்தது இதுக்காகவா கோபால்.. டி20 ஃபைனலில் ரிஷப் பந்த்திற்கு காத்திருந்த பரிதாபம்..

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங் செய்ததை பார்த்ததும் ரசிகர்களுக்கு ஒரு நிமிடம் பதட்டம் தான் உருவாகியிருந்தது. தென்னாபிரிக்க அணி முதல் முறையாக ஐசிசி தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியது. இன்னொரு பக்கம் இந்திய அணி தொடர்ச்சியாக மூன்றாவது ஐசிசி தொடரின் இறுதி போட்டியில் முன்னேறி இருந்தது.

ஆனால் இதற்கு முன்பாக இரண்டு முறையும் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்க வேண்டும் என்ற நெருக்கடியிலும் களமிறங்கி இருந்தனர். அப்படி ஒரு சூழலில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங் எடுக்க அடுத்தடுத்து விக்கெட் சரிந்த வண்ணம் இருந்தது.

ரோஹித் 9 ரன்களிலும், ரிஷப் பந்த் 3 ரன்களிலும் அடுத்தடுத்து நடையைக் கட்ட, இந்திய அணி ஐந்து ஓவருக்குள் 34 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது.

இதன் பின்னர் ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே ஆகியோருக்கு முன்பாக அக்சர் படேல் களமிறங்க, அவரது பேட்டிங் இந்திய ரன் குவிப்பில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 31 பந்துகளில் நான்கு சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர், 47 ரன்களில் அவுட்டாகி இருந்தார். கோலியும் 59 பந்துகளில் 76 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்திருந்தது.

தென்னாபிரிக்க அணியும் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருக்க, இந்த போட்டியில் ரிஷப் பந்த் செய்த சம்பவம் ஒன்றை பற்றி தான் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் பேசி வருகின்றனர். விபத்து காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு ஐபிஎல் தொடரில் கால் பதித்திருந்த ரிஷப் பந்த், தனது ஃபார்மை நிரூபித்து இந்திய அணியிலும் இடம்பிடித்திருந்தார்.

இவர் ஆரம்பத்தில் லீக் போட்டிகளில் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால், அதே வேளையில் ஆரம்பத்தில் இருந்த வித்தியாசமான ஷாட்களை முயற்சி செய்தது ரசிகர்கள் மத்தியில் பீதியையும் ஏற்படுத்தி இருந்தது. அப்படி ஒரு சூழலில் இறுதி போட்டியிலும் இரண்டாவது ஓவரிலேயே ரிஷப் பந்த் டக் அவுட்டாகி இருந்தார்.

ரோஹித் ஒன்பது ரன்னில் அவுட்டாகி பின்னர் உள்ளே வந்த ரிஷப் பந்த், நிலைமையை அறிந்து நிதானமாக ரன் சேர்ப்பார் என அனைவருமே கருதிய நிலையில், இரண்டாவது பந்திலேயே தேவை இல்லாத ஷாட் அடிக்க நினைத்து மகாராஜ் ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்திருந்தார். மிக மிக முக்கியமான போட்டியிலும் கூட ரிஷப் பந்த் இப்படி சொதப்பியிருந்தது ரசிகர்களை கோபமடைய வைத்திருந்தது.

இதனிடையே, அவர் டி20 உலக கோப்பையின் இறுதிப்போட்டியில் டக் அவுட்டான முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு தற்போது சொந்தக்காரராகி உள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...