கார்த்திக் சுப்புராஜ் மக்களை சிரிக்க வைக்கிறார்.. அழவும் வைக்கிறார்.. ஜிகர்தண்டா XX படத்தை பாராட்டிய ரஜினி!..

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அந்த படத்தை பாராட்டி மிகப்பெரிய பாராட்டு பத்திரம் ஒன்றை தற்போது வெளியிட்டு படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கடைசியாக ரஜினிகாந்தை வைத்து இயக்கிய பேட்ட படம் தான் அவருக்கு வெற்றிப் படமாக இருந்தது. அதன் பின்னர், தனுஷை வைத்து அவர் இயக்கிய ஜகமே தந்திரம் மற்றும் சியான் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்த மகான் உள்ளிட்ட படங்கள் தியேட்டர் பக்கம் வராமல் ஓடிடியில் நேரடியாக வெளியாகின.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

இந்நிலையில், 4 ஆண்டுகள் கழித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் தியேட்டரில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளனர். மேலும், மலையாள நடிகர்களான ஷைன் டாம் சாக்கோ, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளவரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார்.

ரஜினிகாந்த் பாராட்டு

”ஜிகர்தண்டா XX படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு, வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். லாரன்ஸால இப்படியும் நடிக்க முடியுமா..? என்ற பிரமிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ். ஜே சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார்.

திருவோடு கேமரா விளையாடி இருக்கிறது. கலை இயக்குனரின் உழைப்பு பாராட்டுக்குரியது. திலீப் சுப்பராயனின் சண்டைக்காட்சிகள் அபாரம். சந்தோஷ் நாராயணன் வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமாக இசை அமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்திற்கு உயிரூட்டி, தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்தப் படத்தில் நிரூபித்து இருக்கிறார்.

இந்த படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு என்னுடைய தனி பாராட்டுகள். படத்தில் வரும் பழங்குடிகள் நடிக்கவில்லை, வாழ்ந்து இருக்கிறார்கள். நடிகர்களுடன் போட்டி போட்டு யானைகளும் நடித்து இருக்கின்றன. செட்டானியாக நடித்திருக்கும் விது அவர்களை எவ்வாறு பாராட்டினாலும் தகும். அற்புதம்.

இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார். பிரம்மிக்க வைக்கிறார். விஜய் டிவி கதை நேரம் வை சிந்திக்க வைக்கிறார். அழவும் வைக்கிறார். i am proud of you கார்த்திக் சுப்புராஜ் my hearty congratulations to கார்த்திக் சுப்புராஜ் and team.” என நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews