ஆடுகளம் ‘ஒத்த சொல்லால..’ பாடலுக்கு ஐடியா கொடுத்தது இவரா? தேசிய விருது பெற்ற பாடலின் பின்னனி

நடிகர் தனுஷுக்கு முதன் முதலில் தேசிய விருதினைப் பெற்றுக் கொடுத்த படமான ஆடுகளம் திரைப்படம் முற்றிலும் மதுரைக் கதைக் களத்தினைக் கொண்டது. இந்தப் படத்தின் இயக்குநர் வெற்றிமாறனுக்கு மதுரைக் களம் புதிது என்பதால் தனது குருவான பாலுமகேந்திராவின் பட்டறையில் ஒன்றாக சினிமா கற்ற இயக்குநர் விக்ரம் சுகுமாரனை இணை இயக்குநராக இந்தப் படத்தில் சேர்த்துக் கொண்டார். வழக்கமாக சென்னைத் தமிழில் பொல்லாதவன், வடசென்னை, விசாரணை போன்ற படங்களை இயக்கிய வெற்றிமாறன் மதுரைக் களத்திற்குப் புதிது.

எனவே ஏற்கனவே மதயானைக் கூட்டம் படத்தினை இயக்கி விமர்சன ரீதியாகப் பாராட்டைப் பெற்ற இயக்குநர் விக்ரம் சுகுமாரனை தன்னுடன் பணியாற்ற அழைத்திருக்கிறார். அதன்படி மதுரை முழுக்க களப்பணி செய்து சேவல் சண்டை, மதுரை வட்டார வழக்கு போன்றவை குறித்த தகவல்களைச் சேகரித்து ஆடுகளம் படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு வலது கரமாக விளங்கியிருக்கிறார் விக்ரம் சுகுமாரன்.

ஆடுகளம் படம் இயக்குநர் வெற்றி மாறனுக்கு சிறந்த இயக்கம், திரைக்கதை ஆகியவற்றிற்கான தேசிய விருதினைக் கொடுத்தது. அதற்கு அடுத்தபடியாக கவனிக்க வைத்தது டான்ஸ் மாஸ்டர் தினேஷ்க்கு இந்தப் படத்தில் கிடைத்த தேசிய விருதுதான். இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒத்த சொல்லால பாடலைக் கேட்டால் எழுந்து ஆட்டம் போட வைக்கும். ஜி.வி.பிரகாஷ்குமாரின் கிராமத்து இசையில், வேல்முருகன் குரலில் ஒலித்த இந்தப் பாடல் நடனத்திலும் சிறப்பாக இருக்கும்.

தளபதி படத்துல இப்படி ஒரு கோர்ட் வேர்டா.. யாரெல்லாம் இத கவனிச்சிருக்கீங்க..

வெறும் கைலி வேட்டியைக் கட்டிக் கொண்டு மதுரை, திருப்பரங்குன்ற வீதிகளில் நாயகன் தனுஷ் ஆடும் இந்த நடனத்திற்கான கருவினை உருவாக்கியவரே விக்ரம் சுகுமார் தானாம். இவரின் ஐடியாவினை அப்படியே டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடன அசைவுகளைக் கொடுத்து சூப்பர் ஹிட் பாடலாக உருவாக்க பாடல் தேசிய விருதுவரை பெற்றது.

பெரும்பாலும் சினிமாவில் ஒரு கதையோ, பாடலோ எடுக்கப்படும் போது அப்போது ஸ்கிரிப்டில் உள்ளதைத் தாண்டி அந்த கண நேரத்தில் சில மேஜிக் நடக்கும். அப்படி விக்ரம் சுகுமாருக்கு தோன்றிய அந்த கணநேர ஐடியாவை வெற்றி மாறனும், தனுஷும், தினேஷ் மாஸ்டரும் பற்றிக் கொள்ள மூவருக்கும் அடித்திருக்கிறது தேசிய விருது.

அதன்பின் விக்ரம் சுகுமார் சமீபத்தில் இராவண கோட்டம் என்ற படத்தினை இயக்கி அதில் சாந்தனுவின் நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார் விக்ரம் சுகுமார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews