புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள்.. ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைச் சட்டங்கள்

இந்தியாவில் ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டங்களே நேற்றுவரை நீதிமன்றங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்திய தண்டனைச் சட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது.

மேலும் இந்திய என்பதற்குப் பதிலாக பாரதீய என்று பெயர் மாற்றப்பட்டு பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்), பாரதிய நாக்ரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் போன்ற குற்றவியல் நடைமுறைச் சட்டத்தினை கடந்த ஆண்டு இயற்றி, தற்போது நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. இவ்வாறு மேற்கொண்ட திருத்தங்களில் பொதுமக்களும் சில அடிப்படைச் சட்டங்களை அறிந்து கொள்ள வேண்டியது கடமை.

அந்த வகையில், குற்றவியல் வழக்குகளில் 60 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விசாரணை முடித்த 45 நாட்களில் தீர்ப்பு வழங்க வேண்டும். நீதி மன்றங்கள் தேவையின்றி வழக்கை ஒத்தி வைக்கக் கூடாது. மேலும் சாட்சிகளைப் பாதுகாக்க அனைத்து மாநில அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும்.

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை பெண் காவல் அதிகாரி மற்றும் பாதிக்கப்பட்டவரின் உறவினரின் முன்னிலையில் பதிவு செய்ய வேண்டும். ஏழு நாட்களுக்குள் மருத்துவ அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதிட்டீங்களா.. எந்த வருடமும் இல்லாத நல்ல மாற்றம்.. சூப்பர் உத்தரவு!

குழந்தையை வாங்குவதும், விற்பதும் கடும் அபராதம் மற்றும் தண்டனைக்கு உட்படுத்தப்படும். சிறார் மீதான கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படக் கூடும்.

கும்பலாகச் சேர்ந்து கொலை செய்தல், வன் கொடுமை செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு இதுவரை 7 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு வந்தது. இனி இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறிய அளவிலான திருட்டு, குடி போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்குவோருக்கு இனி சமூக சேவை செய்யும் வகையில் உத்தரவிடப்படும்.

ஜீரோ முதல் தகவல் அறிக்கை முறையும் அறிமுகமானது. அதன்படி, அதிகார வரம்பைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு காவல் நிலையத்திலும் தனிநபர்கள் முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்ய புதிய சட்டம் அனுமதிக்கிறது.

மேற்சொன்னவாறு சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...