லியோ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகை.. யாரு இவங்களா? போடு செம்ம

விஜய் நடிக்கும் லியோ படத்தில் பிரபல மலையாள நடிகை இணைந்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கி இருந்தார்.

WhatsApp Image 2023 06 20 at 9.41.12 PM 1

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 300 கோடி ரூபாய் வசூல் செய்தது.

WhatsApp Image 2023 06 20 at 9.41.12 PM

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய், லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு சம்பளமாக 120 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

WhatsApp Image 2023 06 20 at 9.41.12 PM 2

இந்நிலையில் லியோ படத்தில் பிரபல மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன் இணைந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்க்கு தங்கையாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார் என்றும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியும் உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் இதற்கான காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது. மடோனா செபாஸ்டியன் பிரேமம் படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். தமிழில் பா. பாண்டி, கவண், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆவார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...