மூஞ்சி முகரையைப் பாரு.. விட்டா வேட்டிக்குள்ள.. எதிர்நீச்சல் மாரிமுத்துவை பிரபலப்படுத்திய அந்த ஒரு சீன்..

சன்டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் சீக்கிரம் முடிவுக்கு வந்ததே ஆதி குணசேகரன் என்னும் ஆளுமை இல்லாததால் தான் என்பது சீரியல் ரசிகர்கள் உலகறிந்த உண்மை. அந்த அளவிற்கு அந்தக் கதாபாத்திரம் டாப் கியரில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்தியது.

ஆனால் திடீரென மாரிமுத்து மாரடைப்பால் காலமாக அந்தக் கதாபாத்திரத்திற்கு வேல. ராமமூரத்தி வந்தார். அவரது பங்களிப்பும் சீரியலில் சிறப்பாகவே இருந்தாலும் மாரிமுத்து மீம்ஸ் நாயகனாகவும், சோஷியல் மீடியாவிலும் வைரலாக வந்தார்.

குறிப்பாக 2K கிட்ஸ்களிடம் ஆதி குணசேகரன் கதபாத்திரம் வெகுவாகச் சென்றடைந்தது. அந்த அளவிற்கு மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாகவே வாழ்ந்தார். அவர் சினிமாவில் பெற்ற புகழை விட சீரியலில் அதிகமாக பிரபலமாகி அடுத்தடுத்து பல்வேறு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. பரியேறும் பெருமாள் படத்தில் சாதி வெறி கொண்ட தந்தையாக நடித்து அப்ளாஸ் வாங்கினார்.

எதிர்நீச்சல் சீரியலில் இவரை பிரபலப்படுத்திய ஒரு காட்சி எதுவென்றால் அது ஜனனி-சக்தி திருமணத்தில் அவர் செய்த அட்ராசிட்டி தான். ஒவ்வொரு டைமிங்கிலும் அவர் எடுத்துவிடும் அந்த வசனம் பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. குறிப்பாக டிரோன் கேமரா படம்பிடிக்கும் போதும், ஜனனியை மணமகளாக அழைத்து வரும் போது நடனமாடிக் கொண்டே வரும் போதும் மாரிமுத்து பேசிய அந்த வசனங்கள் சோஷியல் மீடியாவில் பிரபலமானது.

டிரோன் கேமரா பற்றி இவர் கூறிய அந்த வசனங்களால் டிரோன் கேமரா ஆப்ரேட்டர்கள் சங்கம் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. பின்னர் அவர் அந்தக் காட்சியை டிரோன் கேமராவில் படமாக்கப்பட்டது. அப்படிப் பார்த்தால் கவுண்டமணி செந்தில் காமெடியை எடுத்துக் கொண்டால் ஓராயிரம் குறைகள் சொல்லலாம். எனவே காட்சியின் சுவாரஸ்யத்திற்காக அந்த வசனம் பேசப்பட்டது என்று அவர்களுக்கு விளக்கம் அளித்து சமாதானப்படுத்தியிருக்கிறார்.

அன்பே வா படத்துக்கு வந்த சிக்கல்..பாட்டில் இருந்த அந்த ஓர் வார்த்தை.. சென்சார் போட்ட கத்தரி..

இதுமட்டுமல்லாமல் கல்யாண வீட்டில் அவர் செய்த ரகளைகளைக் கண்டு மாரிமுத்துவின் சொந்த ஊரிலிருந்து அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. எதுக்காக கல்யாண வீட்டில் சண்டை போட்டுகிட்டு இருக்க என்று அவரைக் கேட்டிருக்கிறார்கள். அது வெறும் நடிப்புதான் என்று அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இவ்வாறு எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவின் ஒவ்வொரு அசைவும், வசனமும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கும், ட்ரோல் செய்பவர்களுக்கும் கன்டென்ட் ஆக அள்ளி வழங்கியதால் எதிர்நீச்சல் சீரியல் இவர் இறக்கும் வரை டி.ஆர்.பி-யில் முதலிடத்திலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது கதையின் சுவாரஸ்யம் குறைந்து டி.ஆர்.பியில் அடிவாங்க இயக்குநர் திருச்செல்வம் சீரியலை சீக்கிரமாகவே சுபம் போட்டுவிட்டார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews