பாட்ஷா அளவுக்கு பில்டப்!.. பாக்ஸ் ஆபிஸில் லாஸ் ஆன லால் சலாம்!..

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன்முறையாக நடித்த லால் சலாம் திரைப்படம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் கதையின் நாயகர்களாக நடித்திருந்தனர். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலை தாண்டி விக்ராந்த் அப்பாவாக குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் மும்பை மும்பை கேங்ஸ்டராக ரஜினிகாந்த் நடித்திருந்தார் இந்த பில்டப்புகள் கொடுத்த நிலையில், அவரது கதாபாத்திரம் பாட்ஷா படத்தில் வந்த மாணிக் பாட்ஷா போல இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மொய்தீன் பாய் கதாபாத்திரம் அந்த அளவுக்கு ரசிகர்களை ஈர்க்கவில்லை.

லால் சலாம் 2ம் நாள் வசூல்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கணவர் தனுஷைபிரிந்து இயக்குனராக சாதிக்கப் போகிறேன் என்று நினைத்து இந்த படத்தை இயக்கி இருந்தார். இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகள் அவர் கடும் உழைப்பை போட்டார். ஆனால், படம் வெளியான பின்னர் அதற்கெல்லாம் பலன் கிடைக்கும் என்று பார்த்தால் அதற்கு அப்படியே நேர் மாறாக எல்லாம் போய் விட்டது.

லால் சலாம் படம் விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினி என மூன்று பேர் இருந்தே முதல் நாளில் வெறும் 3.5 கோடி தான் வசூல் ஈட்டியுள்ளது. 2ம் நாளான நேற்று முதல் நாளை விட வசூல் குறைந்து வெறும் 3 கோடி தான் வந்திருப்பதாக கூறுகின்றனர்.

வசூல் சரிவு

லால் சலாம் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்த நிலையில், ப்ளூ சட்டை மாறன் படத்தை டோட்டல் டேமேஜ் செய்து விட்டார். அதன் காரணமாகவே படத்தின் வசூல் பாதிப்படைந்ததா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒட்டுமொத்தமாக இதுவரை 6.5 கோடி தான் அந்த படம் வசூல் செய்திருப்பதாக கூறுகின்றனர். இன்றுடன் சேர்த்தால் 10 கோடி ரூபாய் வசூலை அந்த படம் எட்டும் என தெரிகிறது. ஆனால், திங்கள் முதல் வசூல் அப்படியே மொத்தமாக குறைந்து விடும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.