ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே மட்டுமே செஞ்ச சாதனை.. மும்பை தவித்த போதும் அசால்டாக இடம்பிடித்த கொல்கத்தா..

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் என ஐபிஎல் தொடரில் தலைச்சிறந்த அணிகளின் வரிசையில் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2012 மற்றும் 14 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை கைப்பற்றி இருந்த கொல்கத்தா அணி, 10 ஆண்டுகள் இடைவெளி விட்டு தற்போது மீண்டும் ஒருமுறை ஐபிஎல் கோப்பையை சொந்தமாக்கி உள்ளனர்.

ஒரு அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சேர்ந்து கூட்டாக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது தான் அவர்கள் கோப்பையை வெல்வதற்கான பாதைகளில் செல்கிறார்கள் என்று அர்த்தம். அதனை தங்களின் லீக் போட்டியில் இருந்தே கடைபிடித்து வெற்றிகளை நிறைய குவித்து வந்த கொல்கத்தா அணி, லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தையும் பிடித்திருந்தது. அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே லீக் சுற்றில் அதிக ரன் ரேட் பெற்ற அணி என்ற பெருமையும் இந்த சீசனில் அவர்கள் பிடித்திருந்தனர்.

பேட்டிங் மற்றும் பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துமே கொல்கத்தா அணிக்கு கச்சிதமாக அமைந்திருந்த நிலையில் பிலிப் சால்ட், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயஸ் ஐயர், ரசல், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, ஸ்டார்க் என ஒவ்வொருவரும் முக்கியமான தருணங்களில் தங்களின் பங்களிப்பை தவறாமல் அளித்ததால் கொல்கத்தாவின் வெற்றியும் எளிதாக இருந்தது.

அது மட்டுமில்லாமல் முதலில் பேட்டிங் செய்தாலும், பந்து வீசினாலும் வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு ஆடி இருந்த கொல்கத்தா அணி குவாலிஃபயர் போட்டிகளில் இரண்டு முறையும் ஹைதராபாத்தை வீழ்த்தி கோப்பையை சொந்தமாகி இருந்தது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்த முக்கியமான ஒரு விஷயத்தை தற்போது மீண்டும் செய்து அசத்தியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

தோனி தலைமையில் கடந்த 2021 ஆம் ஆண்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றிருந்த நிலையில் அதே சீசனில் அவர்கள் சேசிங் செய்த அனைத்து போட்டிகளிலும் வெற்றியை தான் பெற்றிருந்தனர். ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு முறை தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருந்தது.

ஒரு சீசனில் சேசிங் செய்த அனைத்து போட்டிகளையும் வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் சிஎஸ்கே விளங்கி வந்த நிலையில் அந்த பட்டியலில் தற்போது கொல்கத்தாவும் இடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனில், கொல்கத்தா சேஸ் செய்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் சிஎஸ்கேவுக்கு அடுத்தபடியாக முக்கிய இடத்தையும் ஐபிஎல் வரலாற்றில் பிடித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...