ஜி திரைப்படம்.. கடுமையாக திட்டிய தியேட்டர் உரிமையாளர்.. சண்டைக்கோழி படத்தால் பதிலடி கொடுத்தல் லிங்குசாமி..!!

2001 ஆம் ஆண்டு வெளியான ஆனந்தம் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் பல படங்களை தயாரித்த தயாரிப்பாளரும் ஆவார். இவர் இயக்கிய மூன்றாவது படம் ஜி. அஜித் திரிஷா நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியானது.

முதல் படம்.. முதல் காட்சியிலேயே கொலை செய்யணும்.. தயங்கிய நெப்போலியன்.. பாரதிராஜா செய்த செயல்..!!

ஆனால் இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் அவர் பட்ட அவமானம் பற்றி பேட்டி ஒன்றில் லிங்குசாமி அவர்கள் பகிர்ந்துள்ளார். அவர் கூறிய போது ஜி படம் வெளியான அன்று தியேட்டரில் ரசிகர்களின் கருத்து என்ன என்பதை தெரிந்து கொள்ள அவர் புறப்பட்ட சமயத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அதை எடுத்ததும் தியேட்டர் உரிமையாளர் ஒருவர் லிங்குசாமியை கடுமையாக திட்டி உள்ளார். என்ன படம் எடுக்கிறீர்கள்? காசு மட்டும் கரெக்டாக வாங்குகிறீர்கள் அல்லவா? என்ன படம் இப்படி எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று கடுமையாக திட்டி உள்ளார்.

ஆனந்தம் திரைப்படம்.. 8 முறை ஒன்மோர்.. டென்ஷனான மம்மூட்டி.. இயக்குனர் பகிர்ந்த தகவல்..!!

இதனால் லிங்குசாமிக்கு வேதனையில் கண்ணீரே வந்துவிட்டது. தியேட்டர் உரிமையாளரிடம் பேச வேண்டும் என்று நினைத்தவர் அதன் பிறகு சரி படம் நல்லா இல்லை என்பதால் தானே இப்படி பேசுகிறார்கள் என்று மனதை தேற்றி கொண்டார். ஆனால் அவரால் எதிலும் நாட்டம் செலுத்த முடியவில்லை.

வீட்டிற்கு சென்றாலும் சகஜமாக இருக்க முடியவில்லை. அப்போது ஒரு வெற்றிப் படம் கொடுத்தே ஆக வேண்டும் என்று தீர்மானத்தில் அடுத்ததாக அவர் இயக்கிய படம் தான் சண்டைக்கோழி. அந்த படமும் 2005 ஆம் ஆண்டு தான் வெளியானது.

எடுத்து முடித்த படம்.. மீண்டும் நடித்த சிவாஜி.. ஏன் தெரியுமா..?

ஜி திரைப்படம் 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான நிலையில் சண்டைக்கோழி திரைப்படம் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரன் உள்ளிட்டோர் நடித்து 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்து லிங்குசாமிக்கு வெற்றி படமாக அமைந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews