நாட்டாமை படத்தில் வரும் இந்தப் பாட்டை நான் தான் முதலில் பாடினேன்… அதற்கு சம்பளம் இவ்வளவு தான் கொடுத்தாங்க… கருணாஸ் பேச்சு…

தஞ்சாவூரில் பிறந்த கருணாஸ் அவர்கள் நகைச்சுவை நடிகராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்து, துணை நடிகர், பாடகர், நடிகர் என வளர்ந்தவர். தனது 12 ஆம் வயதிலிருந்தே நாட்டுப்புற பாடல்களைப் பாட தொடங்கியவர். ‘நையாண்டி தர்பார்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

2001 ஆம் ஆண்டு ‘நந்தா’ திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக வாழ்க்கையை தொடங்கினார். அவர் ஏற்று நடித்த ‘லொடுக்கு’ கதாபாத்திரம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது. அதனால் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார் கருணாஸ்.

தொடர்ந்து வில்லன்(2001), பாபா(2002), பிதாமகன் (2003), திருடா திருடி (2003), திருமலை (2003), இயற்கை (2003), வசூல் ராஜா MBBS (2004), அட்டகாசம் (2004), தேவதையை கண்டேன் ( 2005), திருவிளையாடல் ஆரம்பம் (2006), பொல்லாதவன் (2007), கொம்பன் ( 2014), சங்கத்தலைவன் (2021) போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார் கருணாஸ்.

2008 ஆம் ஆண்டு ‘திண்டுக்கல் சாரதி’ என்ற நகைச்சுவை படத்தில் நடிகராக முதன்முதலாக நடித்தார். இந்தப் படம் சன் பிக்செர்ஸ் தயாரிப்பில் உருவாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அதற்குப் பின்பு, அம்பாசமுத்திரம் அம்பானி ( 2010), சந்தமாமா (2013), ரகளைப்புரம் (2013) ஆகிய திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்.

தற்போது அரசியலில் பணியாற்றிக் கொண்டே சினிமாவிலும் நடித்து வருகிறார் கருணாஸ். இந்நிலையில், தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட கருணாஸ் பாடகராக தனது அனுபவத்தைப் பகிர்ந்துக் கொண்டார். அவர் கூறியது என்னவென்றால், நாட்டாமை படத்தில் வரும் ‘நாட்டாமை பாதம் பட்டா’ பாடலை நான் தான் முதலில் பாடினேன். ஆனால் அது வெளிவரவில்லை. அந்தப் பாடலைப் பாடியதற்காக 200 ருபாய் சம்பளம் தந்தார்கள். நான் சண்டைப் போட்டு பாடல் வெளியாகவில்லை என்றாலும் நான் பாடியிருக்கே என்று பேசி 500 ருபாய் சம்பளம் கேட்டு வாங்கினேன் என்று கூறியுள்ளார் கருணாஸ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews