இப்படி ஒரு நடிகரை நான் பார்த்ததில்லை… விஜய் சேதுபதியை புகழ்ந்த இயக்குனர் பாலா…

மதுரையில் பிறந்து வளர்ந்தவர் இயக்குனர் பாலா. படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் பணிபுரிபவர். தனித்துவமான அடிமட்ட மக்களின் வாழ்வையும் அடிமைத்தனத்தையும் வெளிச்சம் போட்டு காட்டி தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

பாடலாசிரியர் அறிவுமதியால் இயக்குனர் பாலு மகேந்திராவிற்கு அறிமுகமானார் பாலா. ஆரம்பத்தில் அவருக்கு கீழ் தயாரிப்பு உதவியாளராக பணிபுரிந்தார் பாலா. பின்னர் பாலு மகேந்திரா அவர்களின் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் பாலா.

1999 ஆம் ஆண்டு ‘சேது’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தில் விக்ரம் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் வெற்றிப் பெற்று விக்ரம் அவர்களுக்கு ‘சேது’ திரைப்படம் அவரது கேரியரில் முக்கியமானதும் திரும்புமுனையாகவும் அமைந்தது.

2001 ஆம் ஆண்டு ‘நந்தா’, 2003 இல் ‘பிதாமகன்’, 2005 ஆம் ஆண்டு ‘மாயாவி’ என தொடர்ந்து சூர்யா, விக்ரமை வைத்து இயக்கினார் பாலா. 2009 ஆம் ஆண்டு ‘நான் கடவுள்’ படத்தை இயக்கினார். இப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார் பாலா. ‘நான் கடவுள்’ படம் பல விருதுகளை வென்றது. ‘அவன் இவன்’, ‘பரதேசி’, ‘சண்டி வீரன்’, ‘தாரை தப்பட்டை’ போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் பாலா.

தற்போது, விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட பாலா விஜய் சேதுபதியை சேதுபதியை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், ஹீரோ என்றால் அந்த வேடத்தை தவிர பலதரப்பட்ட வேடத்தில் நடிக்க தயங்குவார்கள். ஆனால் விஜய் சேதுபதி, வயதானவர், திருநங்கை, இரண்டு குழந்தைகளுக்கு அப்பா என பல தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படி ஒரு அர்பணிப்பான நடிகரை பார்த்ததில்லை என்று பேசியுள்ளார் பாலா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...