நான் எப்போதும் வெறித்தனமாக லவ் பண்ணும் ஒரே நடிகர் இவர்தான்… ஐஸ்வர்யா பகிர்வு…

பழம்பெரும் நடிகை லட்சுமி அவர்களின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா பாஸ்கரன். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார் மற்றும் மலையாளம், தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார்.

1991 ஆம் ஆண்டு ‘ஒலியம்புகள்’ என்ற திரைப்படம் மூலமாக நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1992 ஆம் ஆண்டு ‘ராசுக்குட்டி’ படத்தில் நடித்ததன் வாயிலாக பிரபலமானார். 1993 ஆம் ஆண்டு ‘எஜமான்’ திரைப்படத்தில் இரண்டாம் நடிகையாக நடித்தார். அத்திரைப்படம் வெற்றிப் பெற்று ஐஸ்வர்யாவின் நடிப்பிற்காக பாராட்டையும் பெற்றுத் தந்தது.

மக்கள் ஆட்சி (1995), சுயம்வரம் (1999), பெண்ணின் மனதைத் தொட்டு (2000), பஞ்ச தந்திரம் (2002), ஆறு (2005), வேல் (2007), ஆம்பள (2015), யானை (2022) போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வ்ர்யா பாஸ்கரன்.

இது தவிர சன் டிவி, மெகா டிவி, ராஜ் டிவி, ஏசியாநெட், கலைஞர் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது பங்களிப்பைக் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா பாஸ்கரன். இது மட்டுமல்லாது பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இது தவிர, தற்போது, மல்டி மம்மி என்ற யூ- டியூப் சேனலையும் நடத்தி வருகிறார் ஐஸ்வர்யா பாஸ்கரன்.

இந்நிலையில், தற்போது நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்ட ஐஸ்வர்யா பாஸ்கரன் அவர்களிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக் கேட்கப்பட்டது. அதற்கு ஐஸ்வர்யா பாஸ்கரன், நான் அன்றிலிருந்து இன்றுவரை வெறித்தனமாக லவ் பண்ணும் ஒரே நடிகர் இளைய திலகம் பிரபு அவர்கள் தான். அந்த அளவுக்கு அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று பதிலளித்துள்ளார் ஐஸ்வர்யா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews