சிலிண்டர் சீக்கிரமாக தீர்ந்து விடுகிறதா.. அதிக நாள் சிலிண்டரை பயன்படுத்த எளிய டிப்ஸ்!

1. முதலில் கவனிக்க வேண்டியது கேஸ் அடுப்பில் சமைக்கும் போது குழிவான பாத்திரத்தை பயன் படுத்தாமல் அடி பக்கம் சமமான பாத்திரத்தை பயன் படுத்தவும். அப்பொழுது தான் தீ சமமாக பரவி உணவு விரைவில் சமைக்க முடியும்.

2 . அதே போல சமைக்கும் போது சமைக்கும் பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும் , அப்பொழுதும் உணவு விரைவில் சமைக்க முடியும்.

3. அடுத்ததாக அரசி, பருப்பு போன்ற உணவுகளை சமைக்கும் போது அதை அரை மணி நேரம் முன்னதாகவே ஊற வைக்க வேண்டும். அரை மணி நேரம் நன்கு ஊறிய பிறகு சமைக்கும் போது விரைவாக சமையல் முடியும்.

4. நாம் பட்டாணி , சுண்டல் போன்ற தானிய வகைகளை சமைக்கும் முன்னாடி நாம் கண்டிப்பாக ஊற வைக்க வேண்டும், சில நேரங்களில் நாம் மறந்து விட்டால் சமைக்க அதிக நேரம் ஆகும். அதை தவிர்க்க ஒரு கடாயில் நாம் சமைக்க வேண்டிய தானியத்தை இளம் சூட்டில் நன்கு வறுத்தெடுக்க வேண்டும். அதன் பிறகு சமைக்கும் போது விரைவாக வெந்து விடும்.

5. மேலும் சில நேரங்களில் நமது வீடுகளில் உறவினர்கள் தீடிரென அதிகமாக வந்து விடுவார்கள், அந்த நேரத்தில் நாம் வீட்டில் 5கிலோ 10 கிலோ என மட்டன் , சிக்கன் அதிகமாக சமைக்க வேண்டியது இருக்கும். அப்போது கறி வேக அதிக நேரம் ஆகும். அதை தவிர்க்க அதனுடன் கோட்டாங்குச்சி ( தேங்காய் சிரட்டை) சேர்த்து வேக வைக்கும் பொழுது சீக்கிரமாக வெந்து விடும்.

6. அடுத்ததாக நாம் சமைக்கும் பாத்திரத்தை கழுவி சுத்தம் செய்து அந்த ஈரத்துடன் பாத்திரத்தை அடுப்பில் வைத்து விடுவார்கள். அப்போது பாத்திரம் சூடாகவே சில நேரம் ஆகும் அதன் பிறகு சமைக்க அதிக நேரம் ஆகும்.

gas 2

7. முக்கியமாக கவனிக்க வேண்டியது நாம் சமைக்கும் காய் கறிகளை வீடுகளில் பிரிட்ஜில் பதப்படுத்துவது உண்டு. அதை அப்படியே எடுத்து அப்படியே சமைக்கும் போது அதில் குளிர்ச்சித்தன்மை அதிகமாக இருக்கும். அதை தவிர்க்க சமைக்கும் முன்னதாகவே காய் கறிகளை பிரிட்ஜில் இருந்து எடுத்து வெளியே வைத்து குளிர்ச்சி தன்மை சென்றதும் சமைக்க வேண்டும்.

8. அடுத்ததாக நாம் சமையல் அளவை முன்னதாகவே கணித்து வைக்க வேண்டும், குறிப்பாக 2 பேருக்கு தான் சமைக்க போவதாக இருந்தால் அதற்க்கு ஏற்ப பாத்திரத்தை பயன்படுத்த வேண்டும் , 2 பேருக்கு ஏற்ப தான் தண்ணீரும் சேர்க்க வேண்டும். அதிகமான தண்ணீரும் பெரிய பாத்திரமும் நேரத்தை வீணாக்கும்.

9. குறிப்பாக சமைக்கும் போது அதற்கு தேவையான பொருட்கள் பக்கத்திலே வைத்திருக்க வேண்டும் . இல்லையென்றால் அதை தேடும் நேரத்தில் கேஸ் மேலும் வீணாகும்.

பெட்ரோல் பங்கில் மொபைல் போன் பயன்படுத்த தடை.. ஆனால் gpay மட்டும் பண்ணலாமா? முழு விளக்கம் இதோ!

10. கேஸ் அடுப்பில் உள்ள பர்னரை சுத்தமாக துடைத்து பயன்படுத்த வேண்டும். அப்போது தான் சிலிண்டரில் இருந்து வரும் நெருப்பு முழுவதுமாக சரியாக வெளியாகி விரைவில் சமைக்க முடியும்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் சமையல் எரிவாயு விலையில் அதை சிக்கனமாக பயன் படுத்த கற்றுக்கொள்வோம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.