ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே தோற்றதும்.. முதல் முறையாக புள்ளிப் பட்டியலில் நடந்த அற்புதம்..

ஆர்சிபிக்கு எதிரான வெற்றி கடைசி சில ஓவர்களில் கடினமான போதும் எப்படியாவது வென்று விடுவார்கள் என கடைசி ஓவர் வரை காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சி இருந்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளும் பலப்பரீட்சை நடத்த அனைத்து அணிகளின் ரசிகர்களும் இதில் யார் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றை உறுதி செய்வார்கள் என்பதை அறியும் ஆவலில் இருந்து வந்தனர்.

அதே வேளையில், சிஎஸ்கே இந்த போட்டியில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் கூட, ஆர்சிபி அணி அடித்த ரன்னை விட 18 ரன்கள் குறைவாக இல்லாமல் இருந்தாலே பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விடலாம் என்ற நிலை தான் இருந்தது.

அப்படி இருந்தும் அனைத்திலும் சிறப்பாக விளங்கிய ஆர்சிபி அணி, சென்னை சூப்பர் கிங்ஸின் பிளே ஆப் வாய்ப்பை கலைத்து மீண்டே வர முடியாத சூழலில் இருந்து பயங்கரமான கம்பேக்கை கொடுத்திருந்தது. அதே வேளையில், எந்த கிரிக்கெட் பிரபலங்களும் ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என கணிக்கவே இல்லை. அப்படி இருக்க, அனைத்திற்கும் தரமான பதிலடியை கொடுத்து பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது ஆர்சிபி.

கடந்த 6 போட்டிகளை நாக் அவுட் போட்டிகள் போல தொடர்ச்சியாக ஆடி ஆர்சிபி வெற்றி பெற்றது போல, எலிமினேட்டர் போட்டி தொடங்கி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வென்றால் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உச்சி முகர்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்கள் இருக்கும் ஃபார்மிற்கு நிச்சயம் எட்டிவிடலாம் என்ற சூழலில் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் மனவேதனையிலும் இருந்து வருகின்றனர்.

ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தாலும் குறிப்பிட்ட ரன்னை எட்டும் முயற்சியில் ஈடுபட்டு அதிலும் ஏமாற்றம் கண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். கடந்த சீசனில் கோப்பையைத் தட்டித் தூக்கிய சிஎஸ்கே, இந்த சீசனில் பந்து வீச்சில் சிறப்பாக திகழ்ந்தாலும் பதிரானா மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் வெளியேற பலவீனம் அடைந்தது.

சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் போகவும் அவர்களின் பந்து வீச்சே காரணமாக அமைந்திருந்த நிலையில், இந்த சீசனில் ஐந்தாவது இடத்தை பிடித்து வெளியேறி உள்ளனர். அப்படி இருக்கையில் தான், இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடக்காத சம்பவம் ஒன்று முதல் முறையாக ஐபிஎல் வரலாற்றில் நடந்துள்ளது.

இந்த சீசனுக்கு முன்பாக இரண்டு முறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் இருந்த சிஎஸ்கே, அந்த சமயத்தில் 7 வது மற்றும் 9 வது இடத்தை பிடித்திருந்தது. மற்ற சீசன்களில் எல்லாம் முதல் 4 இடங்களில் ஒன்றை பிடித்து முன்னேறிய சிஎஸ்கே, இந்த சீசனில் தான் முதல் முறையாக ஐந்தாவது இடத்தை ஐபிஎல் வரலாற்றிலேயே பிடித்துள்ளது என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...