சங்கர் போடும் மாஸ்டர் பிளான்? இந்தியன் 2 தாமதமாவதற்கு இதுதான் காரணமா?

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகிக் கொண்டு வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் மீது பெரிய அளவு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான மிகப் பிரமாண்ட திரைப்படம் தான் இந்தியன்.

இந்தப் படம் வெளியாகி ஒரு சூப்பர் ஹிட் வெற்றியை பதிவு செய்தது. கிட்டத்தட்ட 23 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை கமலுடன் இணைந்து ஷங்கர் இயக்கிக் கொண்டிருக்கிறார். 2017 ஆம் ஆண்டு இந்த படத்திற்கான அடித்தளம் போடப்பட்டது.

ஏழு வருடங்கள் கழித்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ரிலீஸ் தாமதம் ஏற்படுவதாக சில செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கான காரணம் இப்போது வெளியாகியிருக்கிறது.

அதாவது படத்தின் டிரைலர் ரெடியாக இருப்பதாகவும் அந்த ட்ரெய்லர் மிகப் பிரமாண்ட அளவில் தயாராகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் இந்தியன் 2 படத்தின் முடிவில் இந்தியன் 3 படத்தின் டிரைலரையும் சேர்த்து வெளியிட இருப்பதால்தான் அதற்கான பணிகள் இப்போது நடந்து கொண்டு வருவதால் இந்த தாமதம் என்று சொல்லப்படுகிறது.

இந்தியன் முதல் பாகத்தில் அப்பா கமல் வெளியூர் செல்ல மீண்டும் இந்த மாதிரி தவறுகள் நடக்கும் பட்சத்தில் நான் மீண்டும் வருவேன் என்று அவர் எச்சரிப்பது போல படம் முடியும்.
இந்திய 2 திரைப்படத்தில் அதன் தொடர்ச்சியாக இருக்கும் என்பதால் வேறு எந்த மாதிரியான கதைக்களத்தில் இந்த படம் வெளியாக போகிறது? ஷங்கர் எந்த மாதிரி இந்த படத்தை கொண்டு சென்றிருக்கிறார்? என்பதை படம் வெளியாகும் போது நமக்கு தெரிய வரும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...