ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் இணைந்த தனுஷ் – ஐஸ்வர்யா! ரசிகர்கள் கொண்டாட்டம்!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 900 திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் அதிக திரையரங்குகளில் வெளியான முதல் திரைப்படம் என்ற சாதனையை பிடித்து உள்ளது.

மேலும் இந்த படம் முன்பதிவில் பல கோடி வசூலை எட்டிய நிலையில் ஜெயிலர் திரைப்படம் கண்டிப்பாக 1000 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்
ஜெயிலர் படத்தை திரையில் காண பல திரைப்பிரபலங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதன்படி இன்று முதல் நாளிலேயே தமிழ் திரை நட்சத்திரங்களான அனிருத், ரம்யா கிருஷ்ணன், ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் படத்தை பார்த்துள்ளனர். அதை அடுத்து ஜெயிலர் படத்தை முதல் காட்சியில் நடிகர் தனுஷும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒன்றாக பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ஜெயிலர் படத்தின் முதல் காட்சியை பார்க்க நடிகர் தனுஷ் சென்றிருந்தார். இவரை தொடர்ந்து தனுஷின் மனைவியும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதே திரையரங்கிற்கு சென்று இருந்தார்.

வெறும் 500 ரூபாய் சம்பளத்திற்கு நடித்த விஜய்! தெறிக்க விடும் அப்டேட்!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்த வாழும் நிலையில் முதல் முறையாக ஒரே தியேட்டரில் படம் பார்க்க வந்த நிகழ்வு கவனம் பெற்றுள்ளது. ஆனால் அவர்கள் இருவரும் தனித்தனியாக இருந்துதான் படம் பார்த்ததாக சொல்லப்படுகிறது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் பார்த்த ரசிகர்கள் ஜெயிலர் திரைப்படம் இருவரையும் இணைத்து விட்டதாக கருத்து கூறி வருகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...