ருசியான சென்னையின் வடகறி… எத்தனை ஆண்டுகள் பழைமையானது தெரியுமா…?

ருசியான சென்னையின் வடகறி சைதாப்பேட்டையில் மறுசுழற்சி செய்யப்பட்ட வடையால் ஆன உணவாகும். தற்போது சென்னையில் காலை மெனுவில் இட்லி. தோசை, பொங்கலுடன் பரிமாறப்படும் பிரதான மற்றும் பிரபலமான சைடு டிஷ் ஆக மாறிவிட்டது. அத்தனை சுவையானது இந்த வடகறி.

சைதாப்பேட்டையில் உள்ள மாரி உணவகத்தில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த வடகறியை கண்டுபிடித்தனர். அன்று முதல் இன்று வரை வடகறிக்கு பிரபலமான இடமென்றால் அது மாரி உணவகம் தான். அந்த காலத்தில் இந்த வடகறியின் விலை ஒரு ருபாய் தானாம்.

பண்டைய காலத்தில் உணவு பொருட்களை வீணடிக்க மாட்டார்கள். அப்படி ஒருநாள் இரவு மசாலா வடை மீதமாகி இருக்கிறது. அந்த மீதமான வடையை சில கூடுதல் மசாலாக்களைச் சேர்த்து புது உணவாக செய்தார்கள். அப்படி உருவானது தான் இந்த சைதாப்பேட்டையின் வடகறி. தற்போது புதிதாக வறுத்த அல்லது ஆவியில் வேகவைத்த வடைகளைக் கொண்டு வடகறி தயார் செய்யப்படுகிறது.

மாரி உணவகத்தின் உரிமையாளரான மாரிமுத்து தேவரின் கைப் பக்குவத்தில் விற்பனை செய்யப்பட்ட இந்த வடகறி தற்போது எம். குமரன் என்பவர் தனது சகோதரர்களுடன் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார். ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த வடகறி தற்போது நியாயமான விலையில் விற்பனை ஆகிறது.

என்னதான் இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி இருந்தாலும் சிறிது வடகறியை வைத்து சாப்பிடும்போது அதன் சுவையில் மெய் மறந்து போவார். இந்த வடகறி சாப்பிடுவதற்கென்றே தனி ரசிகர் கூட்டங்கள் இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...