திரையுலகை கலக்கிய நாகவள்ளி!

நாகவள்ளி என்ற கேரக்டரை தமிழ் ரசிகர்கள் திரையில் அறிந்திருக்க மாட்டார்கள். அதே கேரக்டரை தெலுங்கு பேசும் சந்திரமுகியாக சந்திரமுகி படத்தில் பார்த்திருப்பார்கள்.

77b7817712f90a0b52e5883441ce2e85

பாஸில் இயக்கிய மணிச்சித்ரதாழ் என்ற மலையாள படத்தில் தான் அப்படியான ஒரு கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் ஷோபனா நடித்திருந்தார்.

மலையாளத்தில் இருந்து கொஞ்சம் கமர்ஷியலாக பி வாசுவால் உல்டா செய்யப்பட்டு ஆப்த மித்ராவாக கன்னடத்தில் வந்து, தமிழில் சந்திரமுகியாக உருமாறியது.

இதில் ஒரிஜினல் மலையாளத்தில் கேரள மன்னரின் மனைவியான பேய் கதாபாத்திரத்தில் தமிழ் பேயாக நாகவள்ளி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். க்ளைமாக்ஸில் வரும் பாடலும் ஒரு முறை வந்து பார்ப்பாயா என்று தமிழிலேயே வந்திருந்தது.

இந்த படத்தில் நாகவள்ளி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஷோபானாவுக்கு 1994ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews