பாகிஸ்தான் வீரருக்கே வராத தைரியம்.. பும்ராவின் ஆட்டத்தை ஒரே பந்தில் அடக்கிய அமெரிக்க வீரர்..

டி 20 உலக கோப்பை போட்டிகளில் பல சிறிய அணிகள் வெற்றி பெற்று வரும் சூழலில் யார் அடுத்த சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்பதே மிகப்பெரிய புதிராக உள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி ஏறக்குறைய சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்துள்ள நிலையில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கும் அடுத்த சுற்று முன்னேறுவதற்கான வாய்ப்பு நெருக்கடியான சூழலில் தான் உள்ளது.

இப்படி சர்வதேச போட்டியில் அசத்தும் பெரிய அணிகள் டி 20 உலக கோப்பை தொடரில் தடுமாறி வரும் அதே வேளையில் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஸ்காட்லாந்து என சிறிய அணிகள் வெற்றிகளையும் குவித்து வருகின்றன. அந்த வகையில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள அமெரிக்க அணி பாகிஸ்தானை வீழ்த்தி அதிர்ச்சி அளித்திருந்தது. முன்னதாக கனடாவை தோற்கடித்த அமெரிக்கா இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றிருந்ததுடன் மட்டுமில்லாமல் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறு வாய்ப்பையும் பலப்படுத்தி இருந்தது.

இன்னொரு பக்கம் இந்த பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளை வீழ்த்தியுள்ள சூழலில் அமெரிக்காவுக்கு எதிராக 3 வது போட்டியில் மோதி இருந்தனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளும் தீவிரமாக களமிறங்கி இருந்தது.

அந்த வகையில் டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்ய அதன்படி ஆடிய அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்திருந்தது. முந்தைய இரு போட்டிகளிலும் பேட்டிங்கில் அதிக பலத்துடன் திகழ்ந்த அமெரிக்காவால் இந்திய அணிக்கு எதிராக அப்படி செயல்பட முடியாமல் போனது.

இதனால் 20 ஓவர்களில் குறைந்த ரன்களை மட்டும் தான் எடுத்திருந்தனர். அதிலும் இந்த போட்டியில் முதல் ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், நான்கு ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அவருக்கு பக்கபலமாக நின்ற ஹர்திக் பாண்டியா, நான்கு ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 14 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்த நிலையில் இந்திய அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தி இருந்தது.

ஆனால் முந்தைய இரண்டு போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருது வென்றிருந்த பும்ரா, இந்த போட்டியில் நான்கு ஓவர்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 25 ரன்கள் கொடுத்திருந்தார். அது மட்டுமில்லாமல் முதல் இரண்டு போட்டிகளில் எந்த அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களும் பும்ராவிற்கு எதிராக சிக்ஸ் அடிக்காத சூழலில் இந்த முறை ஹர்மீத் சிங் சிங் என்ற அமெரிக்க வீரர் இந்த போட்டியில் சிக்ஸ் அடித்திருந்தார்.

மேலும் அதே ஓவரில் ஒரு ஃபோர் மற்றும் சிக்சருடன் பும்ராவின் ஓவரில் 14 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் வீரர்களாலேயே முடியாத ஒரு விஷயத்தை அமெரிக்க வீரர் செய்து முடித்துள்ளதை தற்போது பலரும் வியப்புடன் தான் பார்த்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...