ஐபிஎல் 2024.. பும்ரா, ஜடேஜா சேர்ந்து செஞ்ச தரமான சம்பவம்.. எந்த பந்து வீச்சாளரும் நெருங்க முடியாத இடம்..

நடப்பு ஐபிஎல் சீசன் லீக் சுற்று இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் பல சாதனைகளையும் அடுத்தடுத்து நொறுக்கி புதிய வரலாறையும் படைத்து வருகின்றது. பேட்ஸ்மேன்களுக்கான பொற்காலமாக இந்த சீசன் பார்க்கப்பட்டு வரும் நிலையில் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு சீசனில் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸர்கள் என்ற பெருமையை இன்னும் ஏறக்குறைய 10 போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் எட்டிவிட்டது.

இன்னும் நிறைய போட்டிகள் மீதம் இருப்பதால் பல புதிய மைல்கல்களுக்கும் இந்த சீசன் அடிப்படையாக இருக்கும் என்றும் தெரிகிறது. இதற்கிடையே பேட்டிங்கில் பல்வேறு சாதனைகளை இளம் வீரர்கள் தொடங்கி அனுபவ வீரர்கள் வரை படைத்து வரும் நிலையில் தான் சில பந்து வீச்சாளர்களும் இந்த முறை அதிக கவனத்தை பெற்று வருகின்றனர்.

விக்கெட் எடுப்பதற்கு வாய்ப்பு குறைவாக இருக்கும் நிலையில் அதிலும் மிக கச்சிதமாக பந்து வீசி எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா. இதுவரை ஆடி முடித்துள்ள 13 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை எடுத்துள்ள பும்ரா, தனது சராசரியையும் மிக கச்சிதமாக வைத்துள்ளார்.

இவரை தொடர்ந்து ஹர்ஷல் படேல், வருண் சக்கரவர்த்தி, கலீல் அகமது, சுனில் நரைன், நடராஜன் உள்ளிட்ட பல பந்து வீச்சாளர்களும் இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளனர். இந்த நிலையில் தான் பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் இணைந்து இந்த சீசனில் தொட்ட முக்கியமான உயரம் ஒன்றை பற்றி தற்போது பார்க்கப் போகிறோம்.

அதாவது குறைந்தபட்சம் இந்த சீசனில் 240 பந்துகளுக்கு மேல் வீசி குறைந்த சிக்ஸர்களை கொடுத்துள்ள பந்து வீச்சாளர்கள் வரிசையில் முதலிடத்தில் பும்ரா உள்ளார். இவர் 311 பந்துகள் வீசி வெறும் பத்து சிக்ஸர்களை மட்டும் தான் கொடுத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ஜடேஜா 264 பந்துகளை வீசி 10 சிக்ஸர்களையும் கொடுத்துள்ளார். இதில், பும்ரா ஒரு போட்டியில் ஒரு சிக்ஸர் வீதம் என மிக அற்புதமாக பந்து வீசி வருகிறார்.

இவர்களுக்கு அடுத்த இடத்தில் போல்ட் 254 பந்துகளை வீசி 11 சிக்ஸர்களையும், யாஷ் தயாள் 259 பந்துகளை வீசி 11 சிக்ஸர்களும் கொடுத்துள்ளார். இப்படி சிக்ஸர் மழையாக இருக்கும் இந்த சீசனிலும் சில பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி குறைவான சிக்ஸர்களை கொடுத்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...