பிரிட்ஜ்ஜில் வைத்த உணவு சாப்பிட்டால் அட்டாக் வருமா? வைரல் பதிவு இதோ..

இன்றைய காலகட்டத்தில் அனைவரின் வீடுகளிலும் இருக்கும் முக்கியமான பொருட்களில் ஒன்று பிரிட்ஜ். அதை நாம் எப்படி பயன் படுத்துகிறோம் என்பது தான் முக்கியமானது. அதை முறையாக பயன்படுத்தினால் எந்த பாதிப்பும் கிடையாது. அதை தேவை இல்லாமல் பயன்படுத்தினால் பல விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

நம் வாழ்வில் அத்தியாவசிய பொருளாக மாறியுள்ள பிரிட்ஜ்ஜை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் எப்படி பயன்படுத்த கூடாது என இந்த பதிவில் காணலாம்.

பிரிட்ஜ் என்பது குளிர்ச்சி கொடுத்து பொருட்களை கெட்டு போகாமல் பார்த்து கொள்ளும் உபகரணம். அதில் பழங்கள் காய்கறிகள் பால், ஜூஸ் வகைகள் போன்றவற்றை வைக்கலாம். அதில் நாம் சமைத்த உணவுகளை வைக்கும் போது தான் அது நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சமைத்த பொருட்களை பிரிஜ்ஜில் வைத்து அதை மீண்டும் மீண்டும் சூடு படுத்தி சாப்பிடவே கூடாது. உதாரணமாக நாம் கீரையை எடுத்து கொள்வோம். கீரை சத்தான உணவு அது நமக்கு தெரிந்தது.

அதற்காக அதிக அளவு கீரை வாங்கி சமைத்து சாப்பிட்டு மீதி உள்ள கீரையை பிரிட்ஜ்ஜில் வைக்க கூடாது. அப்படி வைத்து அதை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடும் போது விஷத்தன்மையாக மாறும். பொதுவாக கீரையில் அதிக இரும்பு சத்துக்கள் என்னும் நைட்ரேட் இருக்கிறது அந்த கீரையை மீண்டும் மீண்டும் சூடு படுத்தும் போது விஷத்தன்மையுடைய நைட்ரைட் ஆக மாறி விடுகிறது.

அதனால் தான் கீரையை இரவு நேரங்களில் உண்பதை கூட தவிர்க்க வேண்டும். அது ஜீரண கோளாரை ஏற்படுத்தும்.

அதை தொடர்ந்து நாம் அனைவருக்கும் பிடித்தமான உணவு உருளை கிழங்கு. இதை பிரிஜ்ஜில் வைத்து பதப்படுத்த கூடாது. மேலும் சிலர் அடுத்த நாள் தேவைக்காக இன்றே உருளை கிழங்கை வேக வைத்து பிரிட்ஜ்ஜில் பதபடுத்தி வைக்கின்றனர், இது முற்றிலும் தவிர்க்க வேண்டிய விஷயம்.

உருளை கிழங்கு சம்பந்த பட்ட கூட்டு கறி , குழம்பு , தொக்கு , பொரியல் அனைத்தையும் பிரிஜ்ஜில் வைத்து அடுத்து சூடு படுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படி மீண்டும் சூடு படுத்துவதால் அதில் உள்ள சத்துக்கள் இல்லாமலே அழிந்து விடும்.அதையும் மீறி சாப்பிட்டால் வயிறு உபாதைகள் , வாந்தி ,அஜீரண கோளாறு என அனைத்து உடல் பிரச்சனைகளும் ஏற்படும்.

அடுத்ததாக நம் வீடுகளில் பஜ்ஜி, சிக்கன், மீன் பொரித்த எண்ணெய்யை மீண்டும் காய்கள் சமைப்பதற்கு பயன்படுத்துகிறோம் அது மிகவும் தவறான ஒன்று. அப்படி மீண்டும் மீண்டும் அதே எண்ணெய்யை பயன்படுத்தும் போது நமக்கு உடல் பாதித்து அட்டாக் வர கூட காரணமாக அமைகிறது,

அதற்க்கு காரணம் என்ன தெரியுமா மீண்டும் மீண்டும் ஒரே எண்ணெய்யை பயன் படுத்தும் போது அதில் அதில் ஒருவித  ஆக்ஸைடு உள்ளது , அதை நமக்கு புற்று நோய் ,இதய நோயை ஏற்படுத்துகிறது.

தினமும் குளித்ததும் buds பயன்படுத்துபவர்களா நீங்கள்.. இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கு தான்!

இது மட்டும் இல்லாமல் முட்டை, காளான், சிக்கன், மட்டன் ,கீரை இந்த பொருட்களை சமைத்து இளம் சூட்டில் சாப்பிட்டு முடித்து விட வேண்டும், அதில் மீதம் உள்ளதை பிரிஜ்ஜில் பதப்படுத்த கூடாது. அப்படி பதப்படுத்தி சாப்பிடும் போது அதில் கொழுப்பு 2 மடங்கு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் அசைவங்களில் அதிகப்படியான புரதங்கள் இருக்கும் அதை மீண்டும் மீண்டும் சூடு படுத்தும் போது புரதங்கள் இரண்டு மடங்காக மாறி நமக்கு உணவு செரிமானத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

முக்கியமான ஒன்றாக சமைத்த குழம்பு வகைகளை பிரிஜ்ஜில் பதப்படுத்துவதை தவிர்ப்பது போல சமைத்த சாதத்தையும் பிரிட்ஜ்ஜில் வைத்து பதப்படுத்த கூடாது.

அப்படி வேக வைத்த சாதத்தை பதப்படுத்தி அதை மீண்டும் சூடு படுத்தும் போது அதில் பேசில்லஸ் செல்டஸ் என்னும் பாக்டிரியா நமக்கு விஷமாக மாறுகிறது. அதானால் நம் வீடுகளில் இனி சமைத்த குழம்புகள் சாதத்தை பதப்படுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

 

 

 

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.