வாட்டி வதைத்த குளிர்.. சூரி மேல் பட்ட நெருப்பு.. பதறிய பிரபு.. அடுத்த நொடி செஞ்ச சம்பவம்

காமெடி நடிகராக இருந்து புரோட்டா சூரி இன்று விடுதலை சூரியாக அடைந்த வளர்ச்சி பிரம்மிக்கத்தக்கது. மதுரையிலிருந்து கிளம்பி சினிமா ஆசையில் 90களின் இறுதியில் வந்து எலட்ரீஷியன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு ஷுட்டிங் ஸ்பாட்களில் எலக்ட்ரீஷியாக வேலை பார்த்து அதன்பின் வடிவேலு உள்ளிட்ட காமடி நடிகர்களுடன் கூட்டத்தில் ஒருவனாய் ஓரமாய் நின்றவர் இன்று மக்கள் கூட்டத்தின் முன் ஹீரோவாக மிளிர்கிறார். சூரியின் இந்த வளர்ச்சிக்குப் பின்னால் அவர் பட்ட கஷ்டங்களும், சிறுசிறு அவமானங்களும் அவரைச் செதுக்கிய உளிகள்.

சூரி ஆரம்ப காலகட்டத்தில் ஷுட்டிங் ஸ்பாட்டில் எலக்ட்ரீஷியனாகவும், உதவியாளராகவும் பணிபுரிந்து கொண்டிருந்த சமயம் அது. அப்போது இளைய திலகம் பிரபு நடித்த பொன்மனம் படத்தின் ஷுட்டிங் ஊட்டியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு பாடல் காட்சிக்காக பின்னனியில் பனிமூட்டம் இருக்கும்படி காட்சி அமைக்கப்படுகிறது.

அந்தக் காட்சியில் அப்போது பனிமூட்டம் தெரியாததால் நெருப்பினைப் பற்ற வைத்து அதில் சாம்பிராணி புகையைப் போட்டு செயற்கையாக பனி மூட்டம் போன்று ஏற்படுத்துவார்கள். இந்த வேலையைப் பார்க்கும் பொறுப்பு அப்போது அப்படத்தில் வேலை பார்த்த எலக்ட்ரீஷியனான சூரியிடம் வந்திருக்கிறது.

சூரி வழக்கம் போல் நெருப்பினைப் பற்ற வைத்து காட்சிக்குத் தேவையான லொகேஷன் பின்னனியில் நெருப்பினை ஒரு பந்து போல் சுருட்டி அதில் சாம்பிராணி புகையைப் போட்டு சுற்றிக் கொண்டே வந்திருக்கிறார்.

அப்போது எதிர்பாரா விதமாக அந்த நெருப்பு பந்து கழன்று சுற்றிக் கொண்டே வந்த சூரியின் உடல் முழுதும் பட சூடு தாங்காமல் அலறியிருக்கிறார். உடனே ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்கள் அவரை நெருப்பிலிருந்து மீட்டு முதலுதவி அளித்து காப்பாற்றினர்.

கலைவாணர் என்.எஸ்.கே-வின் வில்லுப்பாட்டை மலையாளத்தில் கிராமிய பாட்டாக மாற்றிய இசைஞானி

அப்போது பிரபு அங்கு நடந்தவற்றைக் கேட்டுக் கொண்டு ஏதும் சொல்லாமல் போய்விட்டார். மறுநாள் அதே போல் கடுங்குளிர் வாட்ட படக்குழுவினர் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த பிரபு அதையும் கவனித்தார். அதற்கடுத்த நாள் எதிர்பாராமல் அனைவருக்கும் தரமான ஸ்வெட்டர் வந்து இறங்கியிருக்கிறது. அனைவருக்கும் அந்த ஸ்வெட்டர்களை சூரி உள்ளிட்ட அனைவருக்கும் வழங்கி படக்குழுவினர் பாதுகாப்பினை உறுதி செய்தார்.

மேலும் நெருப்பு பற்றி காயத்துடன் இருந்த சூரியிடமும் நலம் விசாரித்து விட்டுச் சென்றிருக்கிறார் இளைய திலகம் பிரபு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...