ஆடி மாதம் புதுமண தம்பதிகளை பிரித்து வைக்க என்ன காரணம்?!


a8302cfaa59d1b0bc9c1265e0ff6bd6e

ஆடி மாசம் புருசனும் பொண்டாட்டியும் ஒன்றாய் இருந்து தாம்பத்தியத்தில் ஈடுபட்டு, கருத்தரித்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும்.   சித்திரை மாதம் வெயில் காலம், கத்திரி வெயில் தாயையும் , குழந்தையையும் பாடாய் படுத்தும் அதனால்தான் புதுசா கல்யாணம் ஆனவங்களை பிரிச்சு வைக்குறது ஊருக்குள் பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம்.
அதன்படி பார்த்தால், குடும்பக்கட்டுப்பாடு செய்துக்கொள்ளும்வரை பெண்களை தாய் வீட்டுக்கு அனுப்பனுமே. முதல் ஆடிக்கு மட்டும் ஏன் கூட்டி போறாங்க?! மத்த ஆடிக்குலாம் ஏன் கூட்டிப்போறதில்ல?! அவர்கள் சொல்படி பார்த்தால், ரெண்டாவது குழந்தை ஆடியில் கருத்தரித்து சித்திரை வெயில்ல பிறறந்தால் அவஸ்தைப்படாதா?! இல்ல ரெண்டாவது ஆடில இருந்து ஆடி மாசம் மட்டும் கருத்தரிக்காம போய்விடுமா?! ஏசி, ஏர்கூலர், பேன்னு பலவசதிகள் வந்துவிட்ட இந்த காலத்திலும் பழைய ஐதீகத்தை அவசியம் தொடரத்தான் வேண்டுமா?! அப்படியென்றால் ஆடிமாதம் தம்பதிகளை பிரித்து வைக்க என்னதான் காரணம்?!

ஆடிமாதம் தம்பதிகளை பிரித்து வைக்கும் உண்மையான காரணம் என்னவென்று இனியாவது தெரிந்துக்கொள்வோம். அந்தக்காலத்தில் விவசாயமே பிரதானமா இருந்தது. ஆடியில உழவு, சேடை ஓட்டுதல்,  நடவு, விதைத்தல், நடுதல்ன்னு விவசாயம் சார்ந்த பணிகள் ஏராளம்.  ஆடியில் விவசாய வேலைகளை ஆரம்பித்தால்தான் தீபாவளி, கார்த்திகை, பொங்கல் மாதிரியான பண்டிகை நேரங்களில் அறுவடை நடந்து பண வரவு தாராளமாய் இருக்கும்.  அதேமாதிரி ஆடிமாசம் விதை வாங்க, வரப்பு சீர் செய்ய, கிணறை சரிப்பார்க்க, ஏர் உழ, நடவு மாதிரியான வேலைகளுக்கு அதிகளவு பணம் தேவைப்படும். அதனாலதான் அந்த மாசம் சுப காரியம் எதும் நடத்தாம விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க.

290e41abacc790c90da051efa73e9096

அதுமட்டுமில்லாமல், ஆடி மாதத்தில பித்ரு கடன் செய்ய ஆடி அமாவாசை, ஆடிக்கிருத்திகை, கருட பஞ்சமி, நாகபஞ்சமி, ஆடிப்பெருக்கு, ஆடித்தபசு, ஆடிப்பூரம், தீமிதி, கூழ் வார்த்தல்ன்னு வரிசையா திருவிழாக்கள் வரும். இந்த நாளில் புதுமண தம்பதிகள் மனம் சஞ்சலப்படும்ன்னுதான் புது பொண்ணை அம்மா வீட்டுக்கு அனுப்பி வைக்கும் வழக்கம் உண்டானது.  

நம் முன்னோர்கள் ஒரு வருடத்தை போக சம்பிராதாயம், யோக சம்பிராதாயம் என இரண்டாய் பிரித்து வைத்துள்ளார்கள். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையிலான ஆறு மாசமும் யோக சம்பிராதயம்.  இந்த ஆறு மாசம் தெய்வ வழிபாடு உச்சத்துல இருக்கும்.  தை முதல் ஆனி மாதம் வரையிலான ஆறு மாசத்தை போக சம்பிராதயம் என பிரித்து கல்யாணம், காது குத்து, விருந்துன்னு சந்தோசத்தை அனுபவிக்கும் காலம்.

இதுவே ஆடிமாதம் தம்பதிகளை பிரித்து வைக்கும் காரணமாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...