’தளபதி 64’ படத்தின் டைட்டில் குறித்து படக்குழுவினர்களின் முக்கிய அறிவிப்பு

405e06a3665ce5e6c1280e55723b3d68-2

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படப்பிடிப்பை முடித்த பின்னர் சென்னை திரும்பும் படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தவுள்ளனர். இதனையடுத்து வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ‘சம்பவம்’ என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தகவலை படக்குழுவினர் மறுத்துள்ளனர். சம்பவம் என்பது படத்தின் டைட்டில் பெயரோ அல்லது பாடலின் பெயரோ இல்லை என்றும் இதுகுறித்து வெளியாகி வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் டைட்டில் ஜனவரி 1ஆம் தேதி வெளியாவதாக கூறப்படுவதும் உண்மையில்லை என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் அனிருத் இசையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, சாந்தனு, அந்தோனி வர்கீஸ், ஆண்ட்ரியா, ஸ்ரீமான், சஞ்சீவ், ரம்யா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews