சூரிய கிரகணம் என்றால் என்ன!? ஜூன் 21 அன்று நிகழும் சூரிய கிரகணம் எங்கெல்லாம் தெரியும்?!

2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை நிகழ உள்ளது. இந்த நேரத்தில் சூரியன் ஒரு பிரகாசமான வளையம் போல் காட்சி தரும். இந்த கிரகணம் மிக நீளமானது என அறிவியல் வல்லுனர்களும், ஜோதிட வல்லுனர்களும் சொல்லி உள்ளனர். இந்த மிக நீண்ட சூரிய கிரகணம் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி உள்ளது.

1265bf70d83486fba7784bfba6798740

சூரிய கிரகணம் என்றால் என்ன?!

கோள்களுள் ஒன்றான பூமி, தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமியின் துணைக்கோளான சந்திரன் பூமியைச் சுற்றி வருகின்றது என்பது பெரும்பாலானோர் அறிந்த தகவல்தான். சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரு சேர நேர்க் கோட்டில் வரும் நிகழ்வே கிரகணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சூரியன், சந்திரன், பூமி என்ற வரிசையில் மூன்றும் நேர் கோட்டில் இருக்கும்போது சூரியன் வெளிச்சத்தை நிலவு மறைக்கிறது. பூமியில் இருந்து பார்க்கும்போது சூரியனை நிலவு மறைக்கும் காட்சி தென்படும். இதுவே சூரிய கிரகணமாகும்.. இதுவே சூரியன், பூமி, சந்திரன் என்ற வரிசையில் இருக்கும்போது சந்திரனின் வெளிச்சம் பூமியில் மறைக்கிறது. இது சந்திரகிரகணம் என அழைக்கப்படுகிறது

சந்திரன் சூரியனை மறைக்கும் நிலையைப் பொறுத்து சூரிய கிரகணம் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அந்த மூன்று வகை சூரிய கிரகணங்களில் வரும் ஜூன் 21ம் தேதி நிகழக்கூடிய சூரிய கிரகணம் எந்த வகை என்பதை இனி பார்க்கலாம்..

முழு சூரிய கிரகணம்..

முழு சூரிய கிரகணம் நிகழும்போது சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் இருக்கும். முழு சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருக்கும். சூரியன் அளவைவிட சந்திரன் மிக மிக சிறியது. ஆனாலும், பூமிக்கு அருகில் சந்திரன் இருப்பதால் சூரியனை சந்திரன் முழுவதுமாக மறைத்து விடுகிறது. இதனால் சூரியனை முழுவதுமாக பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு, சூரிய ஒளி பூமியை அடையாமல் வெளிச்சம் குறைவாக இருக்கும் நிலை ஏற்படும். முழு சூரிய கிரகணம் ஆகும்.

பகுதி சூரிய கிரகணம்

பகுதி சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில், சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரக்கூடிய சந்திரன் சூரியனின் ஒரு பகுதியை மட்டுமே மறைக்கும். இதில் சூரியனின் ஒரு மிகச் சிறிய அல்லது ஒரு பகுதியை மறைக்கும் அதனால் பகுதி சூரிய கிரகணம் என்று குறிப்பிடப்படுகிறது.

வளைய சூரிய கிரகணம்

வட்ட கிரகணம் அல்லது வளைய சூரிய கிரகணம் நிகழும்போது சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும். சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வருகிறது. அதாவது சூரியனின் மையத்தில் சந்திரன் வருவதால் அதன் நிழல் பகுதி மறைக்கும். இருப்பினும் சூரியனை முழுவதுமாக சந்திரனால் மூடப்படாததால் மறைக்கப்பட்ட பகுதிக்கு வெளியே உள்ள பகுதி ஒளிரும் என்பதால் ஒரு வட்டம் அல்லது வளையமாக தோன்றுகிறது. இப்படி வளையல் வடிவத்தில் வரக்கூடிய சூரிய கிரகணத்தை வட்ட சூரிய கிரகணம் அல்லது வளைய சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

கிரகணம் இந்தியாவில் எங்கெல்லாம் நிகழும்?!

ஜூன் 21 ல் நிகழ இருக்கும் சூரிய கிரகணம் உலகின் பல நாடுகளில் காண முடியும்.

சூரிய கிரகணம் இந்தியா முழுக்க நன்றாக பார்க்கலாம். பாகிஸ்தான், சீனா, ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் பார்க்கலாம். வானத்தில் நெருப்பு வளையத்தை கண்டு ரசிக்கலாம்.

தமிழ்நாட்டில் இந்த சூரிய கிரகணம் காலை 10:15:32 மணிக்கு சேலத்தில் தொடங்குகிறது. சென்னையில் 10:21:45 மணிக்கும் கோவையில் 10:12 மணிக்கும் இந்த கிரகணத்தை பார்க்கலாம். மதுரையில் 10:17:05 மணிக்கும் திருச்சியில் 10:18:20 மணிக்கும் கிரகணத்தைப் பார்க்கலாம். சூரிய கிரகணத்தை வெற்று கண்களால் பார்க்கக்கூடாது.



புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...